சென்னை பட்டினப்பாக்கம் விஜயா.. இரவில் வந்த ஆண்கள் கூட்டம்.. 12வது முறையாக சிக்கிட்டாரே
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் குடிசைப்பகுதி லூப் சாலை முள்ளிமா நகரை சேர்ந்த 65 வயதாகும் விஜயா என்பவர் 'டாஸ்மாக்' மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 12 முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். சட்டவிரோதமாக மதுவிற்பனையை யார் செய்தாலும் அவர்களிடம் உள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்யும் போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கம். அந்த வகையில் பட்டினப்பாக்கம் விஜயா 12வது முறையாக சிக்கி உள்ளார்.
பொதுவாகவே டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அதிகாரப்பூர்வமாக செயல்படும் நேரம் ஆகும். அதன்பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும். தனியார் மதுபான பார்கள் மட்டும் இரவு 11 மணி வரை இயங்குகின்றன. அதற்குமேல் எந்த ஒரு மதுக்கடைகளும் இயங்க அனுமதி இல்லை.. பார்களில் இரவு நேரங்களில் மதுபானங்கள் விற்பனை செய்வது சட்டவிரோதம் ஆகும். ஆனால் சென்னையில் ஆங்காங்கே இரவு நேரங்களில் மதுபான பார்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு பார்களில் மதுவிற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் போலீசார் அடிக்கடி ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம் சில பகுதிகளில் டாஸ்மாக் உள்பட எந்தவிதமான மதுக்கடைகளும் இல்லை. அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் உள்ளது.
உதாரணமாக சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தாண்டி அடுத்து கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் எங்குமே மதுக்கடைகள் கிடையாது. பட்டினப்பாக்கம், சாந்தோம், எம்ஆர்சி நகர் உள்பட சில பகுதிகளில் மதுக்கடைகள் இல்லை.. இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் சட்டவிரோதமாக அவ்வப்போது மதுபான விற்பனை செய்வதாக புகார்கள் வருவது வழக்கம். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
அந்த வகையில் சென்னை பட்டினப்பாக்கம் குடிசைப்பகுதி லூப் சாலை முள்ளிமா நகரை சேர்ந்தவர் விஜயா (வயது 65). இவர், 'டாஸ்மாக்' மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 12 முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே இவரது பெயர் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவர், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வரும்போது இவரது நடமாட்டத்தை போலீசார் கண்காணிப்பது வழக்கமாகும். இந்த நிலையில் அவர், பட்டினப்பாக்கம் அல்போன்சா விளையாட்டு மைதானம் அருகே மீண்டும் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு கண்காணித்த போது, விஜயா பதுக்கி வைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 41 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் விஜயா, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications