விளவங்கோட்டில் விஜயதாரணி போட்டி! மீண்டும் ஏமாற்றிய பாஜக! ஜெயலலிதாவே இன்ஸ்பிரேஷன்! யார் இவர்?
சென்னை: நீண்ட காலமாக எந்த பதவியும் இல்லாமல் காத்திருந்த நிலையில் விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அரசியலுக்கு செல்ல விரும்பிய விஜயதாரணியின் கனவு தற்போதைய சூழலுக்கு நிராசையாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
அந்த கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் பாஜகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

அண்ணாமலைக்கு எந்த தொகுதியில் சீட் கொடுப்பது என்ற ஆலோசனையால் வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ் தாமதம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் வேட்பாளர்கள் பட்டியலை தேசிய பாஜக அறிவித்துள்ளது. அதில் நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
27 வேட்பாளர்கள் பின்வருமாறு:
மயிலாப்பூர்- தமிழிசை
தளி- டாக்டர் நாகேஷ் குமார்
மொடக்குறிச்சி- கிருத்திகா சிவகுமார்
உதகை- போஜராஜன்
அவிநாசி- எல்.முருகன்
திருப்பூர் தெற்கு- எஸ்.தங்கராஜ்
கோவை வடக்கு- வானதி சீனிவாசன்
கந்தர்வகோட்டை- சி.உதயகுமார்
புதுக்கோட்டை- என்.ராமசந்திரன்
திருப்பத்தூர்- கே.சி.திருமாறன்
மதுரை தெற்கு- ராம சீனிவாசன்
சாத்தூர்- நயினார் நாகேந்திரன்
திருச்செந்தூர்- கேஆர்எம் ராதாகிருஷ்ணன்
வாசுதேவநல்லூர்- ஆனந்தன் அய்யாசாமி
ராதாபுரம்- எஸ்.பி.பாலகிருஷ்ணன்
நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி
விளவங்கோடு- விஜயதாரணி
ஆவடி-ராஜசிம்ஹ மகிந்திரா
திருவண்ணாமலை- சி.ஏழுமலை
தஞ்சாவூர்- எம்.முருகானந்தம்
திருவாரூர்- கோவி சந்துரு
அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்
ராசிபுரம்- டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்
ராமநாதபுரம்- கே.நாகேந்திரன்
பத்மநாபபுரம்- பி.ரமேஷ்
மானாமதுரை- வி.பாலகணபதி
குளச்சல்
இதில் அண்ணாமலை கேட்ட தொகுதி கிடைக்காததால் அவர் போட்டியிடவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அண்ணாமலைக்கு செல்வாக்கு இல்லாததால் அவரை தலைமை கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் பலம் வாய்ந்தவராக இருந்த விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். இவர் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியாவார். காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டவர் விஜயதாரணி.
அது போல் கட்சியிலும் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டில் காங்கிரஸ் மகளிர் அணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட விஜயதாரணி கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் இருந்தார்.
மேலும் அதே ஆண்டு மீண்டும் விளவங்கோடு எம்எல்ஏவானார். வழக்கறிஞரான விஜயதாரணி, மூன்றாவது முறையாக எம்எல்ஏ ஆனதும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. ஆனால் விஜயதாரணிக்கு மாநில அரசியலை விட தேசிய அரசியலுக்கு செல்ல ஆசை இருந்தது.
இதனால் தனக்கு எம்பி தேர்தலில் ஒரு வாய்ப்பு கேட்டு பலமுறை போராடியிருக்கிறார். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. கன்னியாகுமரி எம்பி தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எண்ணிய நிலையில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த விஜயதாரணி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதியிருந்தார். ஆனால் அவர் ஏமாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு கட்சியில் பதவியும் கிடைக்காமல் இருந்தார். இது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் வேதனை தெரிவித்திருந்த நிலையில் இந்த முறை விளவங்கோடு சட்டசபை தேர்தலில் விஜயதாரணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்பட்டது.
அந்த வகையில் இன்று வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம்பெற்றுள்ளது. கிட்டதட்ட 2 ஆண்டுகளாக எந்த பதவியில் இல்லாமல் இருந்த வந்த நிலையில் தற்போது இந்த பட்டியலால் விஜயதாரணியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் விளவங்கோடு தொகுதி திமுக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகாததால் யார் வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி, தேசிய அரசியலுக்கு செல்லவே அங்கிருந்து பாஜகவுக்கு வந்தார். ஆனால் பாஜகவிலும் அவரது தேசிய அரசியல் ஆசை நிராசையாகி தற்போது மாநில அரசியலுக்கே இடம் கிடைத்துள்ளது. இதற்கு எதற்காக காங்கிரஸில் இருந்து வந்தார் என்பது கேள்வியாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அரசியல் ரீதியாக விஜயதாரணிக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அவரது தைரியம்தான் தனக்கு ஊக்கமாக இருந்ததாக நிறைய பேட்டிகளில் விஜயதாரணி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications