குமரியில் மலருமா தாமரை? ஓல்டு ஸ்டூடண்டை இறக்கி பல்ஸ் பார்க்கும் பாஜக! விஜயதரணி விளவங்கோடு விஜயம்!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸில் மிகப் பிரபலமாக இருந்த விஜயதரணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அமித்ஷாவையே சந்தித்து பேசும் அளவுக்கு செல்வாக்கு இருந்தும் பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டது போல இருந்தார். கடந்த தேர்தல்களிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் அவரது சொந்த தொகுதியான விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மூன்று முறையாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவி விஜயதாரணி, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திடீரென பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜயதாரணி, 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவி தனக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால் அந்த பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர், காங்கிரஸ் கட்சி தலைமை பதவியிலும் அதே நிலை ஏற்பட்டது.

விஜயதரணி
இந்நிலையில், 2024 விஜயதரணி நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விரும்பினாலும், காங்கிரஸ் தலைமை அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த விஜயதாரணி பற்றி பாஜக தலைவர்கள் அறிந்து கொண்டனர். பல நாட்கள் டெல்லியில் முகாமிட்டபின், பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவர் பாஜகவில் இணைக்கப்பட்டார்.
விளவங்கோடு
2024 தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த இவர், அந்த சீட் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டதால் கடும் ஏமாற்றம் அடைந்தார். பொன். ராதாகிருஷ்ணன், 2014 மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றதால், அங்கு அவர் முக்கியம் என தேசிய தலைமையால் கருதப்பட்டார். அதனால் தான் 2024 தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட்டார்.
பாஜக
இதனால், விஜயதாரணி எதிர்பார்த்த நாடாளுமன்ற எம்பி சீட்டை அவரால் பெற முடியவில்லை. விஜயதாரணி பாஜகவில் சேர்ந்த பின்னர், எம்எல்ஏ தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும், கட்சியிலும் முக்கிய பதவிகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர் மிகுந்த அதிருப்தியில் இருந்து, மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷாவை நேரில் சந்தித்து தனது குறைகளை கூறினார்.
சட்டமன்ற தேர்தல் 2026
அதுவரை எந்தவித நிவாரணமும் வழங்கப்படாத நிலையில், பழைய தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தன்னைத் தவிர வேறு யாரும் பெரிய ஆள் ஆகக் கூடாது என நிர்வாகிகளை ஓரங்கட்டிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் விஜயதாரணியும் ஒருவர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றுள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியில் பல அதிரடி மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார்.
மீண்டும் போட்டி
ஏற்கனவே கட்சியில் சேர்ந்த சரத்குமார், குஷ்பூ உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் விஜயதாரணிக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் மேலும் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் விஜயதாரணிக்கு மகிழ்ச்சி வரும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் தனது சொந்த தொகுதியான விளவங்கோடு தொகுதியில் பாஜக தரப்பில் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.
விளவங்கோடு விஜயதரணி
12 ஆண்டுகள் தொகுதிக்கு பரீட்சையமானவர் என்ற முறையில் அவரை அவரது தொகுதியிலேயே களம் இறக்க பாஜக தலைமை முடிவு செய்திருக்கிறது. தற்போது கன்னியாகுமரியில் உள்ள ஆறு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் பலமாக இருக்கிறது. அதிமுகவும் குமரியில் வலுவாக இருக்கும் நிலையில் அங்கு குறிப்பிடத்தக்கது. வாக்கு சதவீதத்தை பெற நினைக்கும் பாஜக இந்த முறை விஜயதாரணியை களம் இறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது என நினைக்கிறது பாஜக தலைமை. நீண்ட நாட்களுக்கு பிறகு பாஜக தரப்பிலிருந்து தனக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் கிடைத்திருப்பதால் விஜயதாரணியும் உற்சாகத்தில் இருப்பதாக சொல்கின்றனர் பாஜகவினர்.
-
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications