தேமுதிகவினருக்கு ஹேப்பி நியூஸ்! .. உற்சாக விஜயகாந்த் .. வைரலாகும் அமெரிக்க படங்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Vijayakanth in America | சிகிச்சைக்கு சென்ற இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விஜயகாந்த்

    சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கேப்டனை பார்க்கும் அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    மக்கள் பிரச்சினை என்றால் முதலில் மக்கள் பக்கம் வந்து நிற்பவர் கேப்டன் விஜயகாந்த். என்னதான் இவரை நெட்டிசன்கள் டிரோல் செய்தாலும் அவரது கரம் கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி உதவி என கேட்டால் ஓடோடி வந்து செய்பவர் இவருக்கு நிகர் இவரே. இத்தகைய சிறப்புகளை பெற்ற விஜயகாந்த் தமிழக அரசியலிலும் ஒரு ரவுண்ட் வந்தார்.

    2011- இல்

    2011- இல்

    கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். கட்சித் தொடங்கிய புதிதில் ஒரு சிலரை தவிர்த்து யாரும் இத்தகைய வளர்ச்சியை பெறவில்லை. அதுபோல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2011-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தார்.

    2016-இல் படுதோல்வி

    2016-இல் படுதோல்வி

    திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவெடுத்தார். அப்போதும் சரி கூட்டணி கட்சி என்றும் பாராமல் சட்டசபையில் ஜெயலலிதா முன்பே அத்தனை விமர்சனங்களையும் முன்வைத்தவர். 2016-ஆம் ஆண்டு தேர்தலில் சரி வர பணியாற்றாத காரணத்தினால் தேமுதிகவுக்கு மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. இதனால் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார்.

    போராட்டம்

    போராட்டம்

    எனினும் கட்சி சார்பில் மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்கள், கஜா புயலுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் என அள்ளிக் கொடுத்து வந்த விஜயகாந்த் மக்கள் நல போராட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் தொண்டை பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற அவர் மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

    அமெரிக்காவில் விஜயகாந்த்

    அமெரிக்காவில் விஜயகாந்த்

    இதனால் தேமுதிக தொண்டர்கள் கவலை அடைந்தனர். மேலும் அவர் பூரண நலம் பெற்று மீண்டும் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் மனைவி பிரேமலதா மற்றும் ரசிகர்களுடன் விஜயகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

    புத்தாண்டு பரிசு

    புத்தாண்டு பரிசு

    ஒரு ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜயகாந்தும் பிரேமலதாவும் கலந்து கொண்டனர். தனக்கே உரிதான குழந்தை சிரிப்பில் இருக்கும் விஜயகாந்தின் படங்களை பார்க்கும் அவரது தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதை புத்தாண்டுக்கு கேப்டன் கொடுத்த பரிசாகவே கருதுகின்றனர். இது போல் கடந்த முறையும் அமெரிக்கா சென்ற கேப்டன் அவரது குடும்பத்தினருடன் இருந்த புகைப்படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+