மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு?
Recommended Video
சென்னை: மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சை மேற்கொள்ள விஜயகாந்த் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் பிரேமலதாவும் செல்லவுள்ளதால் இடைத்தேர்தலில் பிரசாரத்தை தவிர்க்கலாமா என யோசனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் சிகிச்சை எடுக்க விஜயகாந்த் தனது மனைவியுடன் சென்றிருந்தார். அங்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை டுவிட்டரில் அனுப்பியிருந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதனிடையே விஜயகாந்த் உடல் நிலை மோசமாகிவிட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கேப்டன் நலமாக இருக்கிறார். அவருக்கு இன்னும் சிகிச்சையே தொடங்கவில்லை. எனவே தொண்டர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா தெரிவித்தார்.

அறிவிப்பு
இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து மைத்துநர் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அது குறித்த இறுதி கட்ட அறிவிப்பை வெளியிட கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தமிழகம் வந்தார்.

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி
பின்னர் கூட்டணி தொடர்பாக விஜயகாந்தின் சாலிகிராமம் வீட்டுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்ததும் போவதும் இருந்ததால் அந்த இடமே பரபரப்பாக காட்சி அளித்தது. இந்த பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது.

பிரசாரம்
வெறும் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் பிரேமலதா தன் கட்சியினர் மட்டுமல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தேர்தல் பிரசாரம் செய்தார். இதையடுத்து விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற கேள்வி எழுந்தது.

ஓரிரு வார்த்தைகள்
இதையடுத்து பிரசாரம் ஓய்வதற்கு முதல் நாளும் ஓய்ந்த அன்றைய நாளும் சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அவரால் முன்பு போல் பேச இயலவில்லை. அதனால் வேனில் அமர்ந்தபடியே அவர் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார்.

யோசனை
இந்த நிலையில் மீண்டும் மருத்துவ சிகிச்சைகளுக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் பிரேமலதா விஜயகாந்த் செல்லவுள்ளதால் 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்கலாமா இல்லை அமெரிக்க பயணத்தை ஒத்தி வைக்கலாமா என பிரேமலதா யோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications