மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்.. 2006-ன் அதிரடிகளை காட்ட மீண்டு வாங்க கேப்டன்!
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.
கேப்டன் விஜயகாந்தை சினிமாவிலும் ஆகட்டும், அரசியலில் ஆகட்டும் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இயல்பாகவே தயாளு குணம் கொண்டவர்.
இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தில்லாக தனித்து போட்டியிட்டு முன்னணி கட்சிகளே அசந்து போய் மூக்கின் மீது விரலை வைக்கும் வகையில் வெற்றி பெற்றார்.

மக்கள் மனதில்...
இதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டார். அப்போது கூட்டணி கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார். இதன் மூலம் விஜயகாந்த் ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் இடம்பிடித்தார்.

படுதோல்வி
இதைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தார். அதன் பிறகு விஜயகாந்திற்கு அரசியலில் தொடர் தோல்விகள் ஏற்பட்டன.

புகைப்படங்கள்
இந்நிலையில் உடல்நலப் பிரச்சினையால் அவ்வப்போது பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா சென்றார். அங்கு குடும்பத்தினருடன் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
— Vijayakant (@iVijayakant) December 18, 2018 |
பிரார்த்தனை
சிறுநீரகம், குரல்வளை பாதிப்புகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் விஜயகாந்த் இன்று மீண்டும் அமெரிக்காவுக்கு பயணம் புறப்பட்டுள்ளார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பழைய கேப்டனாக உங்கள் முன்னால் வருவார் என பிரேமலதா அவ்வப்போது கூறி வருகிறார். அதன்படி விஜயகாந்த் சிகிச்சைகளை முடித்து திரும்பி வரும் போது 2006, 2011 -இல் அதிரடியாக பார்த்த விஜயகாந்தாக வரவேண்டும் என தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications