லஞ்சம் இல்லாத ஆட்சி, நேர்மையான தேர்தல்.. அமெரிக்காவிலிருந்து வீடியோவில் வலியுறுத்தும் விஜயகாந்த்
Recommended Video

சென்னை: லஞ்சம் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என்றும் நேர்மையான தேர்தலுக்கு வழிவகுப்போம் என்றும் அமெரிக்காவிலிருந்து வீடியோ மூலம் குடியரசு தின வாழ்த்துகளை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று 70-ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி அமெரிக்காவில் உள்ள விஜயகாந்த் வீடியோ மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசுகையில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தலை மக்களோடு இணைந்து உருவாக்குவோம்.

மனைவியுடன் அமெரிக்காவில்
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் சென்றுள்ளார்.

வதந்தி
அப்போது ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு உடல்நில மோசமடைந்ததாக தகவல் தீயாய் பரவியது. இதனால் தொண்டர்கள் கவலையடைந்தனர். விஜயகாந்த் நலமுடன் இருக்க பல்வேறு பிரார்த்தனைகளை செய்தனர்.

புத்தாண்டு
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை அமெரிக்காவில் கொண்டாடிய விஜயகாந்த் அது தொடர்பான புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். மேலும் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக பிரேமலதாவும் பேட்டி அளித்தார். இதனால் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.
|
வீடியோ மூலம் நேரில் தோன்றிய விஜயகாந்த்
ஒரு மாதமாக விஜயகாந்தை புகைப்படங்களில் மட்டுமே தொண்டர்கள் பார்த்து வந்தனர். தற்போது அவராகவே தோன்றி வீடியோ மூலம் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications