நான் நல்லா இருக்கேன்.. செவிலியர்களுடன் சத்ரியன் படம் பார்த்தேன்.. விஜயகாந்த் ட்வீட்
சென்னை: நான் நன்றாக இருக்கிறேன் என்றும் செவிலியர்களுடன் சத்ரியன் திரைப்படத்தை பார்த்தேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதல்முறையாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்சிகளில் கலந்து கொண்டார். இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு பின்னர் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தொண்டையில் தொற்று
தைராய்டு பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக பிரச்சினை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சென்னையில் 10 நாட்கள், பின்பு சிங்கப்பூர் சிகிச்சை, அமெரிக்கா என பல சிகிச்சைகளை மேற்கொண்டார். கருணாநிதி மறைந்த போது கூட அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அங்கிருந்தபடியே வீடியோ மூலம் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

பழையபடி
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் கடந்த 30 ஆம் தேதி துபாய் சென்றுள்ளார். அவருடன் இளைய மகன் சண்முகபாண்டியன் சென்றுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் மீண்டும் பழையபடி நல்ல நிலையில் திரும்பி அரசியல் சேவையாற்ற வேண்டும் என தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

விஜயகாந்த் ட்வீட்
இந்த நிலையில் அவர் நலமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தேன் என கூறிய விஜயகாந்த் செவிலியர்களுடன் படம் பார்த்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் சும்மா ஸ்டைலாக கெத்தாக அமர்ந்து கொண்டிருந்தார். அவருடன் 4 செவிலியர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.

பிரார்த்தனை
நீங்கள் செய்த தர்மம் உங்களை எப்போதும் காக்கும். எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்கிறார் ஒரு வலைஞர்.

விஜயகாந்த்
பழைய விஜயகாந்த்தை பார்க்க வேண்டும் சார்..
வாங்க சார் பழைய விஜயகாந்தா வாங்க சார்.
"சத்திரியன் பின்னணி இசை" என்கிறார் இன்னொரு வலைஞர்

நல்லா இருங்க கேப்டன்
நல்லா இருங்க கேப்டன்; சிங்கமா வெளியே வாங்க

பழைய சத்ரியன்
சூப்பர் கேப்டன்.. நீங்க மீண்டும் பழைய சத்ரியனா வரணும்....

சத்ரியன் படம்
சத்ரியன் திரைப்படம் 1990 இல் வெளியானது. விஜயகாந்த், பானுப்பிரியா, ரேவதி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்திருந்தார். இது 150 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனையை படைத்தது. 1990 களில் ஹிட்டான படங்களில் இந்த சத்ரியன் மிகச் சிறந்த படமாகும். இதை மணிரத்னமே தயாரித்து இயக்கி, திரைக்கதையும் எழுதியிருந்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications