மனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்.. பூத்துக்ள் நுழைந்ததும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கெத்து!
மனைவி பிரேமலதாவுடன் வாக்களித்து விட்டு சென்றார் விஜயகாந்த்
Recommended Video
சென்னை: சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
விஜயகாந்த்துக்கு கொஞ்ச காலமாகவே உடம்பு சரியில்லை. அதனால் கூட்டணி, சீட் பஞ்சாயத்து, பிரச்சாரம் என அரசியல் விவகாரங்களில் அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
பிரச்சாரம் முடிவதற்கு ஒருநாள் முன்பு, சென்னையில் 3 தொகுதிகளில் தேமுதிக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தார். அந்த சமயத்தில் அவரால் பழைய மாதிரி பேச முடியவில்லை. பேசியதில் ஒருசில வார்த்தைகளும் புரியவில்லை.

சாலிகிராமம்
இந்நிலையில், சாலிகிராமம் பகுதியில் உள்ள வாக்குசாவடிக்கு விஜயகாந்த் வாக்களிக்க வந்தார். அவருடன் சுதீஷ், பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினர் எல்லாருமே வந்திருந்தனர்.

கூலிங் கிளாஸ்
அவரை ஒரு கையால் பிடித்தபடி அழைத்து வந்திருந்தனர். பூத்துக்கு உள்ளே போனதும் பக்கத்தில் இருந்தவர் கூலிங் கிளாஸை எடுத்து தரவும் அதை விஜயகாந்த் வாங்கி மாட்டிகொண்டார்.

கட்டை விரல்
பிறகு தனது வாக்கு பதிவு செய்தார். எல்லாரும் ஓட்டு போட்டுவிட்டு மை வைத்த விரலை காட்டுவார்கள் என்றால், விஜயகாந்த்தோ தனது கட்டை விரலை காட்டி பெருமிதப்பட்டார். அதே கூலிங் கிளாஸோடு வெளியே அழைத்து வரப்பட்டார் விஜயகாந்த், குடும்பத்துடன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

குழம்பிய விஜயகாந்த்
கடந்த முறை விஜயகாந்த் ஓட்டுப் போட வந்தபோது அவர் எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போடுவது என்று தெரியாமல் குழம்பி தனது மனைவியைப் பார்த்தார். இதையடுத்து உள்ளே போன பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் எந்த சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த முறை அந்தக் குழப்பம் ஏதும் நடந்ததா என்று தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications