பொட்டு வச்ச தங்கக் குடம்.. ஊருக்கு நீ மகுடம்..வெள்ளை மனசுக்காரர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று!
சென்னை: கேப்டன் என்று சினிமா ரசிகர்களாலும் தேமுதிக தொண்டர்களாலும் இன்றைக்கும் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் 70வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். முரட்டு இளைஞனாக சினிமாவில் அறிமுகமாகி..வாரி தந்த வள்ளலாக மாறிய வெள்ளை மனசுக்காரர் விஜயகாந்த் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக திரும்ப வரவேண்டும் என்று இந்த பிறந்த நாளில் வாழ்த்தியுள்ளனர்.
1952, ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் அழகர்சாமி. இவரது பெயரை மாற்றியவர் தயாரிப்பாளர் எம்.ஏ.காஜா. 1979ல் இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் அந்தப் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்
விஜயகாந்த் அடுத்து ஹீரோவாக அறிமுகமான படம் 'தூரத்து இடிமுழக்கம்'. கே.விஜயன் தயாரித்து இயக்கிய, மீனவர் வாழ்வை மையப்படுத்தியிருந்தது.

ஆக்சன் ஹீரோ
இதற்கு அடுத்து வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை'தான் விஜயகாந்த்தின் முதல் வெற்றிகரமான படம் எனலாம். நடிகராக இருந்த விஜயகாந்த்தை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய படம். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் படத்தில் விஜயகாந்த் பட்டை தீட்டப்பட்டார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘நெஞ்சிலே துணிவிருந்தால்', ‘சாதிக்கொரு நீதி', ‘பட்டணத்து ராஜாக்கள்', ‘ஓம் சக்தி', ‘சாட்சி', ‘நீதியின் மறுபக்கம்', ‘வசந்தராகம்' எனத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் இவர் நடித்தார். விஜயகாந்த் கண்கள் சிவக்க பேசும் வசனத்திற்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும்.
Recommended Video

ஏழைகளின் நாயகன்
சந்திரசேகருக்கு அடுத்தபடியாக விஜயகாந்த்தை அதிகப் படங்களில் இயக்கியவர் அநேகமாக இயக்குநர் இராம நாராயணன்தான். ஏவி.எம். தயாரிப்பில், இராம நாராயணன் இயக்கத்தில் நடித்த, ‘சிவப்பு மல்லி' தான் விஜயகாந்தை ஏழைகளின் தலைவனாக்கியது. 1981 ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் தொழிலாளர் வர்க்கத்தில் ஒருவராக அவர்களுடைய நம்பிக்கைக்குரியவராக இவரை மாற்றியது.

சாதனை நாயகன் விஜயகாந்த்
‘சிவப்பு மல்லி' தொடங்கி, ‘சபாஷ்', ‘தண்டனை', ‘கரிமேடு கருவாயன்', ‘வீரன் வேலுத்தம்பி' எனப் பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். ‘வீரன் வேலுத்தம்பி', ‘சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய படங்களில் மு.கருணாநிதியின் வசனத்தை பேசி நடித்துள்ளார். ஏழைப் பங்காளனாகவும் கோபக்கார இளைஞனாகவும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலும் புரட்சிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்த் 1984ஆம் ஆண்டில் 18 படங்கள் 85 ஆம் ஆண்டில் சுமார் 14 படங்கள் நடித்து புரட்சிக்கலைஞராக உயர்ந்தார்.

கேப்டன் விஜயகாந்த்
எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நடிக்க வந்து புரட்சிக்கலைஞராகவும் கேப்டனாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜயகாந்த் தனது அனைத்து கடமைகளையும் முடித்த பின்னர் 1990ல் பிரேமலதாவைக் கைப் பிடித்தார். மதுரை தமுக்கம் மைதானமே கல்யாண விருந்தில் களைகட்டியது. விஜயகாந்த் பிரேமலதா தம்பதியினருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

அரசியல் பயணம்
சினிமாவில் வெற்றிகள் குறையாத நிலையிலும் 2005ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை துணிந்து ஆரம்பித்து, எதிர்நீச்சல் போட்ட அவருக்கு அரசியலில் ஏறுமுகம் என்றுதான் சொல்ல வேண்டும். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே ஜெயித்து சட்டமன்றம் போனார். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

சட்டசபையில் கர்ஜனை
சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பேசினார். அதிமுக தேமுதிக கூட்டணி முறிந்தது. அரசியலில் நுழைந்து 10 ஆண்டுகளில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலை படுத்தப்பட்டார் விஜயகாந்த். ஆனால் பலமில்லாத கூட்டணி அமைத்ததால் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. அடுத்தடுத்த தோல்விகள் விஜயகாந்த்தை அசைத்து பார்த்து விட்டது.

மீண்டு வர பிரார்த்தனை
உடல்நலக்குறைவும் அவரை செயல்பட விடாமல் செய்து விட்டது. அறிக்கைகள் மூலம் மட்டுமே தற்போது அரசியல் செய்து வருகிறார் விஜயகாந்த். அவரது நட்பும் நல்ல உள்ளமும் பலராலும் மறக்க முடியாது. வெள்ளை மனசுக்காரர் விஜயகாந்த் உடல் நலமடைந்து பழைய பன்னீர் செல்வமாக வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications