சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேப்டனுக்கு பிரேமலதாவும்.. பிரேமலதாவுக்கு விஜயகாந்த்தும் கேக் ஊட்ட.. மகன் மகிழ.. ஆஹா கல்யாண நாள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவில் திருமண நாளை கொண்டாடும் விஜயகாந்த்- பிரேமலதா-

    சென்னை: விஜயகாந்துக்கு பிரேமலதா கேக் ஊட்ட.. பிரேமலதாவுக்கு விஜயகாந்த் கேக் ஊட்ட.. என இவர்களின் 29-வது திருமண நாள் அமெரிக்காவில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

    சினிமாவில் கொடி கட்டி பறந்த நேரம்.. ஜனவரி 1990 ஜனவரி 31-ம் தேதி, விஜயகாந்த்துக்கு ஆம்பூரை சேர்ந்த பிரேமலதாவுடன் கல்யாணம் நடந்தது.

    பள்ளியில் அத்லெடிக் சாம்பியன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் விளையாடி, ஐபிஎஸ் கனவுகளுடன் இருந்தவர்தான் பிரேமலதா. கல்யாணம் ஆன மறுநாளே ஷூட்டிங் சென்ற விஜயகாந்த்தின் தொழில் பக்தியை கண்டு வியந்தார். இன்று ஒரு கட்சிக்கு தலைவராக விஜயகாந்த் உயர, அக்கட்சியின் மிகச்சிறந்த பிரச்சாரகராக உருவாகி உள்ளார் பிரேமலதாவும்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    ஆனால் சில வருடங்களாக விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை. சிகிச்சைக்காக அடிக்கடி வெளிநாடு சென்று வருவதால், கட்சி ரீதியாக திறம்பட செயல்பட முடியவில்லை. அதனால் பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி வழங்கினார். மூத்த மகன் விஜய் பிரபாகரனும் அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று முக்கிய பிரச்சினைகளில் கருத்துகளை கூறி வருகிறார்.

    வீடியோக்கள், போட்டோக்கள்

    வீடியோக்கள், போட்டோக்கள்

    இப்போதுகூட சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு போனாலும் முக்கிய அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கைகளை அளித்து வருகிறார் விஜயகாந்த். அடிக்கடி தன் குடும்பத்தாருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களையும் அங்கிருந்தபடியே வெளியிட்டு வருகிறார்.

    குடியரசு தின வாழ்த்து

    குடியரசு தின வாழ்த்து

    கிறிஸ்துமஸ், புத்தாண்டைக் கொண்டாடும் போட்டோக்கள், பிரேமலதாவுடன் 'அக்வாமேன்' சினிமா பார்த்த போட்டோ போன்றவைகளையும் பதிவிட்டு தன் தொண்டர்களை குஷிப்படுத்தி வருகிறார். சமீபத்தில்கூட குடியரசு தினத்தன்று ஒரு குழந்தையை போல விஜயகாந்த் வாழ்த்து சொன்னது மக்கள் மகிழ்ச்சி கலந்த ஆர்வமுடன் பார்த்தார்கள்.

    கேக் ஊட்டி விடுகிறார்

    கேக் ஊட்டி விடுகிறார்

    இந்நிலையில், விஜயகாந்த் இன்று தன்னுடைய 29-வது திருமண நாளை கொண்டாடி உள்ளார். மனைவியுடன் கேக் வெட்டிய போட்டோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. கைகளில் கேக்கினை பிடித்தவாறும், மாறி மாறி தம்பதிகள் கேக் ஊட்டிக் கொள்வது போலவும் போட்டோக்கள் உள்ளன. டீ-ஷர்ட் போட்டு கொண்டு, வழக்கம்போல் சிரிப்புடன் காணப்படுகிறார் விஜயகாந்த். இந்த போட்டோக்களில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனும் இருக்கிறார்.

    தொண்டர்கள் உற்சாகம்

    தொண்டர்கள் உற்சாகம்

    இப்போது விஜயகாந்த் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடும் போட்டோக்களை கண்ட தேமுதிக தொண்டர்கள் திரும்பவும் உற்சாகமடைந்துள்ளனர்.

    English summary
    DMDK Leader Vijayakanth celebrates his 29th Wedding anniversary with Premalatha in USA
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X