சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் பிரச்சனைகளை கவனிப்பதை விடுத்து... குழப்பம் ஏற்படுத்தும் வேலை அரசுக்கு எதற்கு..? -விஜயகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தமிழ்நாடு தினத்தின் தேதியை மாற்றுவது, பள்ளிகள் திறந்த பிறகு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்குவது என குழப்பத்தை உருவாக்கும் வகையில் அரசு செயல்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... இந்த தகுதி இருந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும்..அரசு அறிவிப்பு தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... இந்த தகுதி இருந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும்..அரசு அறிவிப்பு

மக்கள் கேள்வி

மக்கள் கேள்வி

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில்,1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் தற்போது அவசியமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 பெரும் குழப்பம்

பெரும் குழப்பம்

மேலும், இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இல்லம் தேடி கல்வி திட்டம் அவசியமா என்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 மக்கள் பிரச்சனைகள்

மக்கள் பிரச்சனைகள்

நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது ஜூலை 18-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோ டீசல் விலை உயர்வு, சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கின்றனர்.

என்ன பயன்?

என்ன பயன்?

மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் தேதியை மாறுவதால் யாருக்கு எந்த பயனும் இல்லை. எனவே, மக்கள் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

English summary
Vijayakanth demands, TN Govt should reconsider the Illam thedi kalvi scheme
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X