விஜயகாந்த் கட்டை விரலை தூக்க முயன்றதுமே.. திடீர்னு அந்த சத்தம்.. ஆனந்த கண்ணீரில் தேமுதிக தொண்டர்கள்
சென்னை: பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், இன்று தன்னுடைய 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவிக்க, தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும், கோயம்பேடு அலுவலகத்தில் குவிந்துள்ள நிலையில், வாழ்த்தொலி முழக்கம் விண்ணை எட்டிக்கொண்டிருக்கிறது.
வழக்கமாக தனக்கு பிறந்தநாள் என்றால், அதை தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது விஜயகாந்த்தின் வழக்கம்.. சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே, பலருக்கும் உதவியவர் விஜயகாந்த்.. கண்ணுக்கு தெரிந்த மற்றும் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேருக்கு வாழ்வும், சோறும் போட்டவர்..

வறுமை ஒழிப்பு தினம்: அதேசமயம், அரசியலுக்கு வந்தபிறகு, தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார். இந்த நாளில், கூடுதல் நலத்திட்டங்களை வழங்குவது விஜயகாந்த்தின் இயல்பு.. இதன்காரணமாக, தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்தை நேரில் சந்திக்க காலையிலேயே கட்சி ஆபீசில் காலையிலேயே திரண்டுவிடுவார்கள்.
கடந்த வருட பிறந்தநாளில்கூட, தொண்டர்கள் விஜயகாந்த்தை நேரில் சந்திக்க காலையிலேயே கட்சி ஆபீசில் திரண்டனர். விஜயகாந்தால் யாரிடமும் அப்போது பேச முடியவில்லை என்றாலும், தொண்டர்களின் வாழ்த்தொலியை கேட்டு பூரித்து போனார்.. உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினார்.. பிறகு இரு கைகளையும் கூப்பி கூட்டத்தினருக்கு வணக்கம் சொன்னார்..
விஜயகாந்த் : இன்றைய தினம் அவருக்கு பிறந்தநாள் என்பதால், நேற்றே ஒரு அறிக்கையை விஜயகாந்த் வெளியிட்டிருந்தார்.. அதில், "கடந்த 2006-ம் ஆண்டு முதல் எனது பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைபிடித்து வருகிறேன். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த காலங்களில் இலவச வீட்டு மனை நிலங்கள், இலவச திருமணம், பெண் குழந்தைகள் வைப்பு நிதி, இலவச கணினி பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் செய்யப்பட்டன. மேலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்படும்.
கோயம்பேடு அலுவலகம்: இதேபோல், கட்சிக் கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் நலத்திட்டங்களை வழங்க வேண்டும். என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன்.
கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்க உள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டும்" என்று விஜயகாந்த் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டிருந்தார்.
தேமுதிக தொண்டர்கள்: அந்தவகையில், விஜயகாந்த் பிறந்தநாளில் அவரை நேரில் காண்பதற்காக, தொண்டர்கள் நேற்றே தயாராகி விட்டனர். இன்று காலையில் இருந்தே தேமுதிக தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பு குவிய துவங்கிவிட்டனர்.. இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்த் வரஉள்ளதால் அவரை காண வேண்டும் என்ற ஆசையில் காத்துள்ளனர்.
வழக்கம்போல், வெள்ளை சர்ட், வெள்ளை வேட்டி, விபூதி கூலிங்கிளாஸ் சகிதம் விஜயகாந்த் வந்திருந்தார். அப்போது அவரை பார்த்ததுமே தொண்டர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்து முழக்கமிட்டனர். சிலருக்கு கண்களில் நீர் சுரந்தது. விஜயகாந்த் அவர்களுக்கு கைகளை உயர்த்தி காட்டினார்.. பிறகு 2 கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னார். அப்போது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

குஷியில் தொண்டர்கள்: காரணம், 2 நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு என்று திடீரென செய்திகள் பரவிவிடவும், தேமுதிக தொண்டர்கள் டென்ஷனாகிவிட்டனர். கட்சி பொருளாளர் பிரேமலதா, அவர் நலமுடன் இருப்பதாக, விளக்கம் தந்திருந்தபோதிலும், இன்று நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான், கோயம்பேட்டில் காலையிலேயே குவிந்துவிட்டனர் விஜயகாந்தின் பாசமிகு தொண்டர்கள்..!!!
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications