நடித்தால் தான் நாலு பேருக்கு தெரியும்.. நண்பர்கள் தந்த யோசனை.. ஹீரோவாகிறார் விஜயகாந்த் மூத்த மகன் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் விரைவில் ஹீரோ அவதாரம் எடுக்க இருக்கிறார்.

தனது நண்பர்கள் தந்த யோசனை காரணமாகவும் எதிர்காலத்தில் அரசியல் செய்வதற்கு மக்கள் பரிச்சயம் தேவைப்படுவதன் காரணமாகவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

விஜயகாந்தின் மூத்த மகன் ஹீரோ அவதாரம் எடுக்கவிருப்பது தேமுதிகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

விஜய பிரபாகரன்

விஜய பிரபாகரன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவர் சார்பில் கட்சி நிகழ்ச்சிகளில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் அண்மைக்காலமாக பிரேமலதா விஜயகாந்துடன் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரனும் கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார்.

நண்பர்கள் யோசனை

நண்பர்கள் யோசனை

தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் திரைப்படத்தில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்கு விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தும் ஓ.கே.சொல்லிவிட்டதால் நடிப்பு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சினிமா வாரிசு

சினிமா வாரிசு

ஏற்கனவே விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்போதும் நடித்து வருகிறார். விஜயகாந்தின் அரசியல் வாரிசாக மூத்த மகன் விஜய பிரபாகரனும், சினிமா வாரிசாக இளைய மகன் சண்முகபாண்டியனும் கருதப்பட்ட நிலையில் இந்த மாற்றங்கள் நிகழவுள்ளன.

ஆக்‌ஷன் படம்

ஆக்‌ஷன் படம்

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்குள் வருவதற்கு முன்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பரிச்சயம் பெற்றிருந்தார். இப்போது அதே பாணியை பின்பற்ற இருக்கிறார் விஜய பிரபாகரன். அவரது முகச்சாயல் தந்தை விஜயகாந்த் போன்றே இருப்பதால் ஆக்‌ஷன் படங்கள் மற்றும் கிராமியக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+