ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தோம்.. "நல்லாருக்கேன்".. குஷிப்படுத்திய "கேப்டன் குரல்"
தேமுதிக-அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ரொம்ப நாளைக்கு பிறகு விஜயகாந்த் குரல் வெளி வந்துள்ளது. அதை கேட்டதும் இன்பம், சந்தோஷம், திருப்தி, நெகிழ்ச்சி என பல உணர்வுகள் வந்து போகிறது!
விஜயகாந்த்துக்கு சில வருடங்களாக உடம்பு சரியில்லை. இதனால் அடிக்கடி வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு போய் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இப்படி வெளிநாட்டுக்கே போய்வந்தாலும் தமிழக மக்களுடன் அவருக்கு ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருந்தது.
ஆனால் இப்போது அவர் நம்மிடம் பேசுவதே இல்லை.. அவர் எப்படி இருக்கிறார் என்பதை ஒரு சில போட்டோக்களிலும், வீடியோக்களிலும்தான் பார்த்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அப்போது கூட அந்த குரலை கேட்க முடிவதில்லை.

இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. கேப்டன் டிவி சம்பந்தப்பட்ட நபர் விஜயகாந்த்தை பேட்டி எடுக்கும் வீடியோ அது. விஜயகாந்த் வீட்டிலேயே வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஒயிட் அண்ட் ஒயிட் டிரஸ்ஸில் விஜயகாந்த் சோபாவில் உட்கார்ந்திருக்கிறார். கூலிங் கிளாஸ், விபூதி என ஃப்ரஷ்ஷாக தெரிகிறார் கேப்டன்! இப்போது கேள்வி கேட்கப்படுகிறது.
கேள்வி: வணக்கம் கேப்டன்.
பதில்: வணக்கம் சார்.
கேள்வி: எப்படி இருக்கீங்க கேப்டன்?
பதில்: நல்லா இருக்கேன் சார்
கேள்வி: உடல்நிலை எல்லாம் எப்படி இருக்கு?
பதில்: உடல்நிலை எல்லாம் நல்லா இருக்கு.
கேள்வி: அமெரிக்கா போய்ட்டு வந்ததுக்கு அப்பறம் எந்த அளவுக்கு இம்ப்ரூப் ஆயிருக்கீங்க?
பதில்: நான் நல்லா இருக்கேன்
கேள்வி: தமிழக மக்கள் மற்ற பிரச்சாரங்களைவிட தேமுதிக தலைவர் எப்ப வருவார்? எங்க பேசுவார்னு எதிர்பார்க்கிறாங்க?
பதில்: கூடிய விரைவில் வருவேன். நான் என்ன பேசுவேன்னு என்னன்னு அங்க வந்து அவங்கள கேட்க சொல்லுங்க.
கேள்வி: தொடர்ச்சியா பிரச்சாரத்துக்கு போவீங்களா?
பதில்: இல்லை.. அது டாக்டர் அட்வைஸ்படிதான் செய்ய முடியும்
கேள்வி: அதிமுக - தேமுதிக கூட்டணி எப்படி இருக்கு கேப்டன்?
பதில்: அதிமுக கூட்டணிதான் ஜெயிக்கும். திமுக கூட்டணி தோற்கும்.
கேள்வி: ஏன் திமுக கூட்டணி தோற்கும்னு சொல்றீங்க?
பதில்: திமுக தில்லுமுல்லு கட்சி
கேள்வி: அதிமுக-திமுக கூட்டணிகளுக்கு இடையேயான போட்டி எப்படி இருக்கு கேப்டன்?
பதில்: தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கின்ற போட்டி
கேள்வி: அதில நிச்சயமா அதிமுகதான் ஜெயிக்குமா?
பதில்: தர்மந்தான் ஜெயிக்கும்.
கேள்வி: பிரதமர் மோடியை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
பதில்: மோடி நல்லவர். திரும்பவும் ஆட்சிக்கு வர வேண்டும்.
கேள்வி: தேமுதிக தொண்டர்களுக்கு நீங்க இந்த தேர்தல்ல சொல்ல வர்றது என்ன?
பதில்: நல்லா உழைக்க வேண்டும், நாற்பதும் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்"
- இவ்வாறு விஜயகாந்த் பதில் அளித்திருக்கிறார். எல்லாமே ஒருவரி பதில்களாக உள்ளன. இந்த கேள்வி-பதில்கள் எடிட் செய்யப்பட்டுள்ளது போல வேகவேகமாக நகருகிறது. விஜயகாந்த் பேட்டியா என்று வீடியோ ஆரம்பிக்கும்போது இருந்த சந்தோஷம், பேட்டி முடியும்போது என்னமோ இனம்புரியாத சோகத்தை மனதில் தட்டி எழுப்பி சென்றுவிடுகிறது!
தமிழக மக்கள் அதே பாசத்துடன் இப்போதும் காத்திருக்கிறார்கள்.. சீக்கிரமா குணமாகி வாங்க கேப்டன்!
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications