விஜயகாந்த்திற்கு அப்படி ஒரு மனசு.. எனக்கு தொடர்ந்து படம் கொடுத்தார்.. சரத்குமார் இரங்கல்
சென்னை: விஜயகாந்த் தொடர்ந்து எனக்கு படங்கள் நடிக்க கொடுத்தார். பெரிய ஹீரோ ஆன பிறகும் கூட எனக்கு படம் பண்ண கொடுத்தார் என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறினார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு தேமுதிக தொண்டர்களும் அரசியல், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து தங்கள் வேதனையை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கூறியதாவது:-

வணக்கம் இது ஒரு துக்கமான நாளாக தான் சொல்கிறோம். மருத்துவமனைக்கு போகும் போதெல்லாம் அன்பு சகோதரர்.. அன்பு நண்பன் புரட்சி கலைஞர் கேப்டன் பூரண குணம் அடைந்து வீட்டில் வந்து மீண்டும் பழைய விஜயகாந்த் ஆக பார்ப்போம் என்று நினைத்தபோது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. ஒவ்வொரு பொழுதும் மருத்துவமனை போகும் போதெல்லாம் நன்றாக வந்து விட வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதில் நானும் ஒருவன்.
அந்த ஒரு நட்பு எங்க ரெண்டு பேருக்குள்ள தீவிரமாக இருந்தது. அதாவது என்னோட வாழ்க்கை பயணத்தில்.. கலை உலக பயணத்தில் மிகப்பெரிய ஒரு சரிவு இருக்கும்போது என்ன சப்போர்ட் பண்ணுனது விஜயகாந்த்.. இதை நான் பலமுறை சொல்லி இருக்கேன். அலுவலகத்திற்கு போனால் பசுமையாக நியாபகம் இருக்கிறது. புலன் விசாரணை படத்தின் போது அவருடைய மேக்கப் அர்ஜுன் கிட்ட என்ன கூட்டிட்டு போனாரு.. அதுதான் முதல் சந்திப்பு.. நேரடி சந்திப்பும் கூட..
ராவுத்தர் உடன் இயக்குனர் செல்வமணி இருந்தார். முதல் நாளே இயக்குனருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை பார்த்தேன். அவருடைய முடிவுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஒரு புது முகத்தை அந்த ஒரு படத்தில் மிகப்பெரிய படத்தில் அறிமுகம் பண்ணும் போது எதுவும் கேட்கவில்லை. அன்று துவங்கியது நட்பு.... இன்று வரை விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகாந்தை சந்திக்க முடியாது என்று பெரிய வருத்தம் தான். இந்த நாள் நான் சென்னையில் இல்லை என்பது மிகப் பெரிய துக்கம்தான் எனக்கு. அவர் குணங்களைப்பற்றி நிறைய சொல்ல வேண்டும். விஜயகாந்த் சார் தொடர்ந்து எனக்கு படங்கள் நடிக்க கொடுத்தார். அதற்குப் பிறகு பார்த்தீர்கள் என்றால் மிகப்பெரிய கதாநாயகன் வளர்ந்து வருகின்ற ஒரு கதாநாயகனுக்கு வாய்ப்பு தருவார்களா என்பது மிகக் கடினம்.
அந்த ஒரு காலகட்டத்தில் என்ன தாய் மொழி என்ற படத்தில் அவருடைய பேனர்ல ஒரு கதாநாயகனாக நடிக்க வச்சு கவுரவம் வேண்டும் நினைத்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தில் பயணித்த காலங்களில், அவருடைய ஆளுமை திறனை என்னால் பார்க்க முடிந்தது. அதே மாதிரி எனக்கு கொடுத்த மரியாதை.. "அது வந்து பொதுச்செயலாளர் கிட்ட பேசிக்கோங்க அவர் எடுக்க வேண்டிய முடிவு அவர் எடுப்பாரு" என நான் எடுக்க வேண்டிய முடிவுகளை என்னையே எடுக்க விட்டுருவாரு..
மறக்க முடியாத கலை நிகழ்ச்சி வந்து விஜயகாந்த் தலைமையில் தான் நடத்த முடியும் அது நடந்துச்சுன்னா அதுக்கு அவர் தான் காரணம்.. நாங்க எல்லாம் அவர் கூட இருந்து பயணித்த சகாக்களாக இருந்ததைவிட அவருடன் பணியாற்றியதாக இருக்கலாம்.. முடிவுகள் அழைப்பது எப்படி நடக்கணும் இதெல்லாம் சீரமைப்பது அதை செயல்படுத்தி கொடுத்தது விஜயகாந்த்.
தற்போது அவரை இழந்து தவிக்கின்ற அவர் குடும்பத்தாருக்கும் தேமுதிக உறுப்பினர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ரசிக பெருமக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை இரங்கலை என் சார்பாகவும் என் இயக்கத்தின் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன் விஜயகாந்த் சார் நீங்கள் என்றும் அனைவரின் மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.. நீங்கள் மறையவில்லை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். இவ்வாறு சரத்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications