Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கைமாறும்" கணக்கு.. ஒரே ஒரு சீட்டாமே.. கமலை விடுங்க.. விஜயகாந்த் கட்சி யாருடன் கூட்டணி.. "அந்த" தொகுதியா?

தேமுதிக இந்த முறை யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த முறை தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கபோகிறது? எந்த தொகுதியில் போட்டியிட போகிறது? என்ற ஆர்வம் அக்கட்சி தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் நிலவ துவங்கி உள்ளது.

எம்பி தேர்தலுக்கு திமுக கூட்டணி தயாராகி வருகிறது.. பாராளுமன்ற தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் 2 கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள்..

குறிப்பாக, கமலின் மநீம, விஜயகாந்தின் தேமுதிக இரண்டு கட்சிகளும் கன்பார்ம்மாக திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்று ஒரு பேச்சு உள்ளது

 கமல்ஹாசன்

கமல்ஹாசன்

ஆனால், திமுக கூட்டணியில் மநீம ஐக்கியமாகும் என்று உறுதியாக சொல்லப்பட்டு வரும் அளவுக்கு, தேமுதிக பேசப்படாமலேயே இருந்து வருகிறது.. இதற்கு காரணம், பாஜகவுடன் தேமுதிக மேலிட தரப்பு இணக்கமான நட்பை கொண்டுள்ளதுபோல, விஜயகாந்த் மீதும் பாஜக தலைவர்கள் பாசமாகவே இருக்கிறார்கள்.. எனினும், இத்தனை வருடம் நல்லுறவு வைத்திருந்தும்கூட, அமைச்சர் பதவி என்பதை கடைசிவரை மத்திய பாஜக தேமுதிகவுக்கு தரவில்லை.. இதனால் சலிப்படைந்த தேமுதிக, இதற்கு பேசாமல் திமுகவுடனேயே கூட்டணி வைக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம் என்கிறார்கள்..

 விஜயகாந்த் எங்கே

விஜயகாந்த் எங்கே

அதனால்தான் இந்த முறை தேமுதிக, திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.. வலுவிழந்து போயுள்ள தேமுதிக, வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் தான், கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல்முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று அக்கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறதாம்.. மேலும், தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் அக்கட்சிக்கும் வரப்போகும் தேர்தல் ஒரு சவாலாக அமையும் என்கிறார்கள்.. எனவே, கூட்டணியில் இடம் பெற தூது விடும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பமாகும் என்றே தெரிகிறது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இந்தமுறை பெரும்பான்மையான இடங்களில் திமுகவே போட்டியிடக்கூடும் என்பதால், கூட்டணிகளுக்கு குறைவான தொகுதியே கிடைக்க வாய்ப்புள்ளதாம்.. அந்தவகையில், மநீம கமல் 3 சீட்டுகளை கேட்டு வரும் நிலையில், அவருக்கு ஒரு எம்பி சீட் மட்டுமே கூட்டணியில் ஒதுக்கக்கூடும் என்கிறார்கள்.. தேமுதிகவிற்கும் ஒரு சீட் ஒதுக்க வாய்ப்புள்ளதாம்.. அதுமட்டுமல்ல, தென் சென்னை அல்லது ராமநாதபுரத்தில் கமலை நிறுத்துவது என்றும், கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டியிடும் வகையில், கூட்டணி பங்கீடு நடத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.. அதாவது திமுக கூட்டணியில், கமலுக்கு 1, தேமுதிகவுக்கு 1 என்ற ரீதியில் மட்டுமே கூட்டணியில் சீட் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்..

சுதீஷ்

சுதீஷ்

எனினும், இந்த கூட்டணி குறித்து இதுவரை கமல் தரப்பும், விஜயகாந்த் தரப்பும் வெளிப்படையாக சொல்லவில்லை.. அதேபோல, திமுக தரப்பிலும், இந்த கட்சிகளை பற்றி சூசக தகவலைகூட வெளிப்படுத்தவில்லை என்றாலும், கூட்டணி குறித்த அரசல்புரசல்கள் கசிந்தபடியே உள்ளன.. ஒருவேளை, கள்ளக்குறிச்சி தொகுதியை, தேமுதிகவுக்கு ஒதுக்கினால், அது நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும் என்று தேமுதிக தொண்டர்கள் நம்புகிறார்கள்.. அதிமுக, திமுகவுக்கு, விசிக, பாமகவுக்கு தனிப்பட்ட செல்வாக்குகள் உள்ளதுபோல, தேமுதிகவுக்கும் இந்த தொகுதியில் ஓரளவு வாக்கு வங்கி இருக்கவே செய்கிறது.

அண்ணி

அண்ணி

ஏற்கனவே சுதீஷ் இங்கு போட்டியிட்ட தொகுதி என்பதால், இந்த முறையும் இதே தொகுதி ஒதுக்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.. ஆனால், விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவாரா? என்று தெரியவில்லை.. "கேப்டன் எப்படி இருக்காரு அண்ணி" என்று கடந்த முறை பிரச்சாரத்தின்போதே, பிரேமலதாவை அன்புடனும், பாசத்துடனும் அத்தொகுதி மக்கள் விசாரித்தனர்.. எனவே, இந்த முறை விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வரநேர்ந்தால், அது சுதீஷூக்கு மேலும் பலத்தையே பெற்று தரும் என்கிறார்கள்.. தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கிறது என்றாலும், பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல், கூட்டணி தகவல்கள் வட்டமடித்து கொண்டேயிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+