விஜயகாந்துக்கு 101 வயதில் ரசிகை... பிறந்தநாள் ஆசையை நிறைவேற்றிய கேப்டன்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 101 வயது ரசிகை ஒருவரின் பிறந்தநாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை படித்தவர்களுக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். என்ன 101 வயதில் விஜயகாந்திற்கு ரசிகையா என்று, அதில் சந்தேகமே வேண்டாம். தனக்கு 101 வயதில் கூட ரசிகை இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறும் விதமாக விஜயகாந்தே இந்த தகவலையும், படத்தையும் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த்தை பொறுத்தவரை அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் மிக எழுச்சியுடன் ரசிகர் மன்றம் நடத்தியவர். எப்போதாவது ரசிகர்களை அழைத்து பேசாமல் எப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர். அதன் காரணமாகத்தான் அவர் அரசியல் கட்சி தொடங்கும் போது அவருக்கு பின் லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக அக்கட்சியில் இணைந்தார்கள். தனக்கு உடல்நிலை சரியில்லாததால், இன்றும் தனது கட்சியினர் இல்ல விழாக்களுக்கு மனைவியையோ, மகன்களில் யாராவது ஒருவரையோ விஜயகாந்த் அனுப்பி வைத்து வருகிறார்.
இப்போது தேமுதிகவில் உள்ள 80 % பேர் விஜயகாந்துடன் 90களில் இருந்து ஒன்றாக பயணித்தவர்கள். ரசிகர் மன்றத்திலிருந்து கட்சிக்கு இடம்பெயர்ந்தவர்கள். இதனால் தான் இன்னும் தேமுதிக தொண்டர்கள் கட்டுடன் திகழ்கிறது. இதனிடையே சென்னையை சேர்ந்த தெய்வானை அம்மாள் என்பவர் கடந்த முப்பது ஆண்டுகளாக விஜயகாந்தின் ரசிகர் ஆவார். அவருக்கு நேற்று முன் தினம் 101-வது பிறந்தநாள் கொண்டாப்பட்டது. தனது தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என அவர் விரும்பியுள்ளார்.

இதையடுத்து அவரை தேமுதிக தலைமைக்கழகத்திற்கு அழைத்து வர வைத்த விஜயகாந்த், தனது 101 வயது ரசிகையான தெய்வானைக்கு இனிப்புகள் ஊட்டி வாழ்த்து தெரிவித்து அவரும் வாழ்த்து பெற்றுள்ளார். இந்த நிகழ்வில் பார்த்தசாரதி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications