வரணும்.. பழைய பன்னீர்செல்வமாக வரணும்.. விஜயகாந்த் தீவிர அரசியலுக்கு ரீ என்ட்ரி ?
சென்னை: பழைய பன்னீர்செல்வமாக மீண்டு வந்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரது புதிய தோற்றம் அவரது பழைய சினிமா படங்களில் உள்ள தோற்றத்தை போன்று உள்ளது.
Recommended Video
தீவிர அரசியலுக்கு விஜயகாந்த் ரீ என்ட்ரி கொடுப்பார், பழையபடி அவர் அரசியிலில் ஈடுபடுவார் என்று தேமுதிகவினர் உற்சாகமாக உள்ளனர்.
தேதிமுக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அவருக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் அறிக்கை
இதனால் விஜயகாந்த் தேமுதிகவின் முக்கிய நடவடிக்கைகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். குறிப்பாக கட்சிகளின் தலைவர்கள் உடனான சந்திப்பில் மட்டும் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைக்காக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

உயர் சிகிச்சை
உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாட்டுக்கும் சென்று வரும் விஜயகாந்த் கடந்த 2018-ம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அதன்பிறகு, சென்னை மணப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மாதந்தோறும் அல்லது 2 வாரங்களுக்கு ஒருமுறை சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

துபாயில் சிகிச்சை
கடந்த 25-ம் தேதி தனது பிறந்த நாளை வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடிய விஜயகாந்த், தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் உயர் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். அவர் அங்கு நலமுடன் உள்ளார். இந்த தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

விஜயகாந்த் தோற்றம்
இதனிடையே பழைய பன்னீர்செல்வமாக மீண்டு வந்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையுடன் தேமுதிகவினர் உற்சாகமாக காத்திருக்கிறார்கள். விஜயகாந்த் தீவிர அரசியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்தால் அது மிகப்பெரிய பலமாக மாறும் என்று தேமுதிகவினர் நம்புகிறார்கள்.

தேமுதிகவினர் உற்சாகம்
விஜயகாந்த் டீசர்ட் பேன்ட் சகிதம் செவிலியர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள் பலர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசியல் தலைவர்களும், பல்வேறு கட்சி பிரமுகர்களும் விஜயகாந்த் முழு உடல் நலம் பெற்று தீவிர அரசியலுக்கு திரும்ப தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications