கடைசில விஜயகாந்த்தை இப்படி "வசனம்" பேச வச்சுட்டீங்களேப்பா.. !
தேமுதிக கூட்டணி இழுபறி குறித்த மீம்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: கடைசியில தேமுதிக நிலைமை மீம்ஸ்களை போட்டு தாக்கும் அளவுக்கு வந்துவிட்டது!
கூட்டணி சமாச்சாரம் தொடர்பாக கடந்த 3 நாட்களாக தேமுதிகவின் ஒவ்வொரு அசைவையும் தமிழக மக்கள் உன்னிப்பாக பார்த்து வருகிறார்கள்.
கூட்டணி தொடர்பான இழுபறி என்பதுதான் இந்த 20 நாட்களாக வந்த பொதுவான விஷயம். அதனால் விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக கறாராக இருக்கிறார், கண்டிப்புடன் இருக்கிறார் என்றே நாம் நினைத்து வந்தோம்.

மாறி மாறி பேச்சு
ஆனால் கடந்த 3 நாட்களாக பேச்சுவார்த்தைகளின்போது அடிபட்ட ஒரே பெயர் சுதீஷ்தான்! அதிலும் ஒரே நேரத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி பேசி, ஒட்டுமொத்த விஜயகாந்த் மானத்தையும் வாங்கிவிட்டது சுதீஷ்தான்!

ராஜினாமா
அதனால்தான் அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் தேமுதிக நிர்வாகிகளே அதிருப்தியில் உள்ளனர். மணலி நிர்வாகி ராஜினாமா கடிதமே எழுதி கொடுத்துவிட்டு போய்விட்டார்! இந்த நிலையில் ஒரு மீம் வெளியாகி உள்ளது.

கலாய்க்கும் மீம்
அதில் 2 சிறுவர்கள் டிரவுசர் போட்டுக் கொண்டு வெற்று உடம்போடு காலில் செருப்பில்லாமல் தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். (அவர்கள்தான் விஜயகாந்த் மகன் & மச்சான் சுதீஷ்)

கையில் பிரம்பு
அவர்களை வழிமடக்கி நிற்கிறார் ஒருவர் (அவர்தான் விஜயகாந்த்) அந்த சிறுவர்களை வெளுத்து வாங்குவதற்காக கையில் ஒரு நீளமான பிரம்பை பின்பக்கமாக மறைத்து வைத்திருக்கிறார். இப்போது வசனம் ஆரம்பமாகிறது:
விஜயகாந்த்: கூட்டணி பேச எதுக்குடா ஒரே நேரத்துல திமுக & அதிமுகனு ரெண்டு இடத்துக்கும் போனீங்க?
சுதீஷ்: அது ஒன்னும்ல மாமா.. நாம மொத்தம் 7 சீட்டு கேட்டோம். அதிமுகவுல 3 சீட்டு தரதா சொன்னாங்க... அதான் மிச்சம் 4 சீட்டு திமுக குடுப்பாங்களானு கேட்க போனோம்!
விஜயகாந்த்: வாங்கடா இங்க..." என்கிறார். (கண்கள் ரத்த சிகப்பாகி, பற்களை விஜயகாந்த் நறநறவென கடிப்பது போல ஒரு பிரம்மை நமக்கு ஏதோ பழக்கதோஷத்தில் வந்துபோகிறது)
இப்படி அந்த மீம் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் நெட்டிசன்கள் ஒன்றினை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அதாவது பேச்சுவார்த்தைக்கு சென்றது வயது, அனுபவம் குறைந்தவர்கள் என்பதும், எப்படி பேச்சுவார்த்தையை நடத்துவது என்ற அரசியல் அடிப்படை கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதும் இதைவிட அழகாக நச்சென்று சொல்ல முடியாது!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications