விஜயகாந்த் பென்சன்.. ரூ.15,000 பணத்தை வைத்து சிலர் இட்டுக்கட்டி பேசுறாங்க.. பிரேமலதா விளக்கம்!
திருவண்ணாமலை: விஜயகாந்த் மறைவுக்கு பின் தமிழக அரசு சார்பாக அளிக்கப்படும் ரூ.15 ஆயிரம் எம்எல்ஏ பென்சன் தொகையை பெறுவதை வைத்து சிலர் இட்டுக்கட்டி பேசுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். விஜயகாந்துக்கு மக்கள் கொடுத்த அந்த சம்பளக் காசு, வள்ளல் விஜயகாந்த் ட்ரஸ்ட்டிற்கு சென்று கொண்டிருப்பதாக கூறிய அவர், அதன் மூலமாக ஏழை மக்களுக்கு எங்களால் உதவி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2006 முதல் 2016 வரை 10 ஆண்டு காலம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் எம்எல்ஏ இருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் மாதம் பென்சன் வழங்கப்படும். அவர் மறைவுக்கு பின், அவரின் மனைவிக்கு பென்சன் வழங்கப்படும். இந்த நிலையில் விஜயகாந்துக்கு எம்எல்ஏ பென்சன் கோரி, பிரேமலதா கடிதம் விண்ணப்பித்திருந்தார்.

இந்த செய்திகள் வெளியான நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மீது கடுமையான விமர்சனங்களை சிலர் முன் வைத்தனர். இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், விஜயகாந்தின் பென்சன் தொகை ரூ.15 ஆயிரம் விண்ணப்பித்து பெறுகிறோம் என்ற செய்திகள் வெளியாகியது. விஜயகாந்த் எம்எல்ஏ-வாக இருந்த போது, அவருக்கு அரசு தரப்பில் ஊதியம் அளிக்கப்பட்டது.
அவர் மறைவுக்கு பின் பென்சன் தொகை வருகிறது. விஜயகாந்தை எம்எல்ஏ-வாக ஆக்கியது, எதிர்க்கட்சித் தலைவராக மாற்றியதும் மக்கள்தான். யார் ஆட்சியில் இருந்தாலும், அதனை கொடுக்க வேண்டிய அரசின் கடமை. விஜயகாந்திற்கு மக்கள் கொடுத்த சன்மானமாக பார்க்கிறேன். அந்த ரூ.15 ஆயிரம் வைத்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இதனை வைத்து இட்டுக் கட்டி பேசுபவர்கள், விஜயகாந்த் செய்த நலத்திட்ட உதவிகள் செய்திருக்கிறார். அதனைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். விஜயகாந்த் மறைந்து 1.5 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் இன்றும் தலைமை அலுவலகத்தில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை உணவு அளித்து வருகிறோம். விஜயகாந்த் மறைந்ததில் இருந்து ரூ.15 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கிறது.
ஓராண்டுக்கு பின் ஏன் பூதாகரமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. விஜயகாந்துக்கு மக்கள் கொடுத்த அந்த சம்பளக் காசு, வள்ளல் விஜயகாந்த் ட்ரஸ்டிற்கு சென்று கொண்டிருக்கிறது. அதன் மூலமாக ஏழை மக்களுக்கு உதவி செய்ய முடியும். அதனால் புரியாமல், தெரியாமல் தவறான விஷயங்களை பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications