விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்காதது ஏன்? 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக? பரபர தகவல்
சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் தங்க என்ன காரணம்?
Recommended Video

சென்னை: சீக்கிரமாக வந்துவிட மாட்டாரா என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்து கிடந்த நிலையில் இன்று சென்னை வந்துவிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால் இப்படி கால்கடுக்க ஏர்போர்ட்டில் காத்திருந்தும் அவரை நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று தொண்டர்கள் ஏங்கி போய்விட்டனர்.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் உடல்நலம் தேறி இன்றைய தினம் வருவார் என்று நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இன்று அதிகாலை சென்னை ஏர்போர்ட் வந்தடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் விஜயகாந்தை வரவேற்கும் படலம் நேத்து சாயங்காலமே ஆரம்பித்துவிட்டது.

குவிந்த தொண்டர்கள்
முதலில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஏர்போர்ட்டில் நேற்றிரவே தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் தொண்டர்களின் பிரமாண்ட வரவேற்புகள் தயாராக தொடங்கின.

ஏர்போர்ட்டில் டிபன்
பிரான்சில் இருந்து விமானம் மூலம் சரியாக 1.15 மணிக்கு விஜயகாந்த் வந்தார். ஆனால் உடனடியாக அவர் வீடு திரும்பவில்லை. சென்னை ஏர்போர்ட்டில் ஓய்வு அறையிலேயே தங்கி இருந்திருக்கிறார். அதுவும் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தங்கியிருக்கிறார். மனைவி, மகனுடன் ஏர்போர்ட்டிலேயே காலை டிபன் சாப்பிட்டுவிட்டுதான் கிளம்பி சென்றிருக்கிறார்.

என்ன அவசியம்?
ஃபிளைட்டில் இருந்து இறங்கியதும், நேராக வீட்டுக்கு போகாமல், அங்கிருந்த தொண்டர்களையும் சந்திக்காமல் எதற்காக விஜயகாந்த் இவ்வளவு நேரம் தங்க வேண்டும்? என்ன அவசியம் ஏற்பட்டிருக்கும்? உடல் நலம் முழுமையாக குணமடையாமல் இருக்குமோ? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன.

நல்ல நேரம்
விஜயகாந்த் இப்படி ஏர்போர்ட்டில் 8 மணி வரைக்கும் தங்க போகிறார் என்ற தகவல் நேற்றிரவே கசிய ஆரம்பித்துவிட்டது. சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியதால் நல்ல நேரம் பார்த்துதான் வீட்டிற்கு போக வேண்டும் என்று குடும்பத்தாரின் விருப்பப்படி ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 7 மணி நேரம் தங்கி ஓய்வெடுத்தார் என்று மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.

ஆறுதல்
எப்படி இருந்தாலும், இன்னைக்கு வந்துவிட மாட்டாரா? நாளைக்கு வந்துவிட மாட்டாரா என்று ஏங்கி காத்து கிடந்த தொண்டர்களால் விஜயகாந்தை நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்கள். ஆனாலும் உடல்நலம் தேறி நல்லபடியாக ஊர் வந்து சேர்ந்தது சந்தோஷம்தான் என்று தங்களுக்குள் ஆறுதல் சொல்லிக் கொண்டே அனைவரும் திரும்பி சென்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications