கால் மேல் கால் போட்டு.. கலர்ஃபுல் டீ சர்ட்டில்.. அடடா நம்ம கேப்டன்

விஜயகாந்த் வெளியிட்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர் ஃபுல் டீ-ஷர்ட், பேன்ட் அணிந்து, சினிமா தியேட்டரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு போஸ் தருகிறார் விஜயகாந்த்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 2 வருடங்களாகவே உடம்பு சரியில்லை. அரசியலிலும் சரியாக பங்கெடுக்க முடியவில்லை. வெளிநிகழ்ச்சிகளுக்கும் சரியாக வருவதில்லை.

சிங்கப்பூர், அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்தாலும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

முணுமுணுப்பு

முணுமுணுப்பு

இதனிடையே கட்சி பணிகளை மனைவி, மகனிடம் கொடுத்து உள்ளார். மீண்டும் சிகிச்சை பெற அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்த் கட்சி பொறுப்பை குடும்பத்தாரிடம் கொடுத்தபோதே "இனி தேமுதிக அவ்வளவுதான், விஜயகாந்த் இனி நடத்த முடியாது" என்று பலர் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்.

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

10 நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் அமெரிக்கா சென்றபிறகு இந்த பேச்சு மேலும் வலுத்தது. அதனால் சென்ற வாரம் விஜயகாந்த் குடும்பத்துடன் சிரித்து மகிழும் ஒரு போட்டோவை கிறிஸ்துமஸ் அன்றைக்கு பிரேமலதா வெளியிட்டிருந்தார். விஜயகாந்த்துக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாத இறுதியில் ஆபரேஷன்

மாத இறுதியில் ஆபரேஷன்

இதற்கு பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சிறுநீரக சிகிச்சை நிபுணர் சவுந்தரராஜன்தான் சிகிச்சை அளித்து வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் விஜயகாந்த்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டதால் அவர் அமெரிக்கா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கான ஆபரேஷன் இந்த மாத இறுதியில் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உறுப்புகள் செயலிழப்பு

உறுப்புகள் செயலிழப்பு

ஆனால் 2 தினங்களாகவே விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்கள் வேகமாக பரவ தொடங்கின. அவருக்கு உடல் நிலை மோசமாகி விட்டது, உறுப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகிறது என்பன போன்ற விஷயங்கள் வெளிவந்தன.

ட்விட்டர் பதிவு

இதனால் தேமுதிக தொண்டர்கள் கடுமையாக கலக்கமடைந்தனர். ஆனால் இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சினிமா தியேட்டரில் விஜயகாந்த், பிரேமலதாவுடன் சென்று படம் பார்த்து அது சம்பந்தமான போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

மகிழ்ந்தோம்

மகிழ்ந்தோம்

"Watched Aquaman movie in Imax. அக்வாமேன் ஆங்கில திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் இன்று கண்டு மகிழ்ந்தோம்" என்று ட்விட்டரில் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.

தியேட்டரில் படம்

தியேட்டரில் படம்

இந்த போட்டோவில் விஜயகாந்த் டீ-ஷர்ட் பேண்ட் அணிந்து ஸ்மார்ட்டாக இருக்கிறார். தியேட்டரின் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு போஸ் கொடுக்கும் விஜயகாந்த்தை கண்டு தேமுதிக தொண்டர்கள் இப்போது உற்சாகமாகி வருகிறார்கள். அமெரிக்கா போனாலும் தியேட்டரில் போய்தான் படம் பார்க்கிறார் நம்ம கேப்டன்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+