கேப்டன் வீட்டில் இன்னொரு சோகம்.. விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி காலமானார்.. நாளை இறுதிச் சடங்கு
சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான மறைந்த விஜயகாந்த் சகோதரியும் மருத்துவருமான விஜயலட்சுமி இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78. சென்னையில் இருந்து அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நாளை மதுரையில் நடக்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது.
தமிழ் திரை உலகில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை உயர்ந்தவர். ஏழைகளுக்காக நிறைய உதவி செய்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று வரை அங்கு ஆயிரக்கணக்கானோர் தினமும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் மதுரையைச் சேர்ந்தவர்.

அவரது சகோதரி விஜயலட்சுமி சென்னையில் வசித்து வந்தார். மேலும், அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ நிபுணராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தைப் போலவே ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மருத்துவத் துறையில் அவரது சேவையைப் பாராட்டும் வகையில் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் 78 வயதான விஜயலட்சுமி இன்று சென்னையில் காலமானார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் விஜயலட்சுமி இயற்கை எய்தியதாகவும், அவரது உடல் நாளை மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது. விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமியின் மரணத்திற்கு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications