மாஸா, கெத்தா, "ஓஹோய்.." விஜய பிரபாகரன் "பஞ்ச்.." குபுக்கென சிரிப்பலை! இன்னும் என்னல்லாம் பார்க்கனுமோ
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து, தேமுதிக வெளியேறினாலும் வெளியேறியது.. அந்த கட்சி தலைவர் விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரனை கையில் பிடிக்க முடியவில்லை.
Recommended Video

சும்மாவே ஆவேசமாக பேசுகிறேன் என்ற பெயரில் வாயில் வந்ததையெல்லாம் பேசுவதாக விஜயபிரபாகரன் மீது விமர்சனங்கள் உண்டு.. கூட்டணியில் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்ற கடுப்பு காரணமாக இப்போதெல்லாம், இன்னமும் ஒரு படி கீழே இறங்கி பேச ஆரம்பித்து விடுகிறார்.
இப்படித்தான், கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் நேற்று விஜய பிரபாகரன் பேசும்போது, எடப்பாடி .. எடப்பாடி என்று சொல்கிறீர்களே, அவர் என்ன எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதாவா .. இந்தவாட்டி எடப்பாடி தொகுதியிலேயே அவர் தோற்றுப் போவார் என்று சரமாரியாக பேச ஆரம்பித்தார்.

கேலி, கிண்டல்
அது மட்டும் கிடையாது.. எப்போதுமே விஜயகாந்த் பற்றி பேசும்போது, சினிமாவில் வரக்கூடிய பஞ்ச் டயலாக் போல எதையாவது சொல்லி, தொண்டர்களை உசுப்பேற்றி பேசுவது விஜய பிரபாகரன் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படித்தான் ஒரு கூட்டத்தில் அவர் பேசிய "எழுச்சி உரை " தற்போது சமூகவலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஓஹோய்
தொண்டர்களை உசுப்பேற்றுவதா நினைத்துக்கொண்டு அவர் பேசியது கடைசியில் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது. கூட்டணியிலிருந்து விலகி வந்ததை குறிப்பிட்டு, அதை பெருமைக்குரியது போல பேசியுள்ளார் விஜய பிரபாகரன். கூட்டத்துக்கு நடுவே, "மாஸ்ஸா..." என்று விஜயபிரபாகரன் கேட்க.. கூடியிருந்த கூட்டம் "மாஸ்.." என்று பதில் சொல்கிறது. "கெத்தா.." என்று விஜயபிரபாகரன் மீண்டும் கேட்க.. "கெத்து.." என்று கூட்டம் பதில் சொல்கிறது. இத்தோடு விடவில்லை விஜய பிரபாகரன். "கேப்டனா.." "ஓஹோய்.." என்று சிரித்தபடி அவர் சொல்ல.. இதை கேட்டதும் கூட இருந்த நிர்வாகிகளும் குலுங்கி குலுங்கி சிரித்துவிட்டனர்.

சிரிப்பலை
நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்ல.. இந்த "ஓஹோய்" என்ற தொனி உச்சரிப்பை பார்த்து, தமிழகமே சிரித்துக் கொண்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் உலவும் கிண்டல் கேள்விகளை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. யதார்த்தம் தெரியாமல் இவர் ஓஹோய் என சவுண்ட் விடுகிறாரே என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் தொண்டர்கள்.

செல்வாக்கு குறைந்தது
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிறகு தேமுதிக கட்சிக்கு செல்வாக்கு குறைந்து கொண்டே செல்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீதத்தை விட தேமுதிக குறைவாக வாங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நிலைமை இப்படி இருக்கும்போது, கிடைக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு கட்சியை பலப்படுத்துவது விட்டுவிட்டு, அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து இப்போது எங்கே கூட்டணி வைக்கலாம் என்று சிறுசிறு கட்சிகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது தேமுதிக.

கட்சியை வளர்க்க பாருங்க
பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் போன்றோர் இவ்வாறு உணர்ச்சிகரமாக பேசியும் சிந்தித்தும் வருவதுதான் இந்த கட்சி வளர்ச்சி பெற முடியாததற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எனவே, இனியாவது இந்த ஓஹோய்.. ஆஹா போன்ற கோஷங்களை விட்டுவிட்டு, கட்சியை வளர்க்கும் பணியில் தேமுதிக நிர்வாகிகள் ஈடுபட்டால் நல்லது என்ற எதிர்பார்ப்புதான் தொண்டர்களிடம் எஞ்சியிருக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications