விஜயகாந்தின் ராசியான தொகுதி! விருத்தாசலத்தில் பிரேமலதா! 2021-ல் டெபாசிட் காலியான பின்னணி!
சென்னை: விஜயகாந்தின் வெற்றி தொகுதியான விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணியை சேர்ந்த தேமுதிக போட்டியிடுகிறது. அது போல் அதிமுக கூட்டணியை சேர்ந்த பாமக போட்டியிடுகிறது. இவர்களுடன் நாம் தமிழர், தவெக ஆகிய வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இதனால் இந்த களம் அனல் பறக்கும் என்றே சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக நாடாளுமன்றம், சட்டசபை தொகுதிகளில் சில தொகுதிகள் சில வேட்பாளர்களால் நட்சத்திர தொகுதிகளாக அழைக்கப்படும்.

அந்த வகையில் விருத்தாசலம் தொகுதி முக்கியமான தொகுதியாக அறியப்படுகிறது. விருத்தாசலம் தொகுதிக்கு எத்தனை பெருமைகள் ஏற்கெனவே இருந்தாலும் தேமுதிக எனும் கட்சியை விஜயகாந்த் தொடங்கி அந்த இடத்தில் போட்டியிட்டு வென்றதால் அந்த தொகுதிக்கு மேலும் ஈர்ப்பு கூடியது.
தற்போது இதே தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பிரேமலதா போட்டியிடுகிறார். அது போல் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழரசி ஆதிமூலம் போட்டியிடுகிறார். தவெக சார்பில் விஜய், நாதக சார்பில் அமுதா நம்பி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த 4 முனை போட்டிக்கு மத்தியில் விருத்தாசலம் தொகுதி குறித்த சில கணக்கு வழக்குகளை தெரிந்து கொள்ளலாம். 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதன்முதலில் களம் கண்டு வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தது இந்தத் தொகுதியிலிருந்துதான்.
அந்தத் தேர்தலில் தனித்து நின்ற அவர், அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றது தமிழக அரசியலில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. அதன்பின்னர், 2011-லும் இந்தத் தொகுதி தேமுதிக வசமே இருந்தது.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.
இத்தொகுதியில் திமுக, அதிமுக, பாமக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வலுவான வாக்கு வங்கிகள் உள்ளன. சுமார் 2.37 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், ஆண் மற்றும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ சமமாகவே உள்ளது.
2006-ல் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு மொத்தம் 49,795 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். இது அந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 33.4% ஆகும். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஆர். கோவிந்தசாமி 36,018 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் கார்மேகம் 29,380 வாக்குகளையும் பெற்றனர்.
விஜயகாந்த் தனது முதல் தேர்தலிலேயே சுமார் 13,777 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக சார்பில் வி. முத்துகுமார் 72,902 வாக்குகளைப் (47.24%) பெற்று வெற்றி வாகை சூடினார்.
இருப்பினும், 2016-ல் தனித்துப் போட்டியிட்டபோது தேமுதிகவின் வாக்கு வங்கி, சரிவைக் கண்டு 34,036 வாக்குகளாகக் குறைந்தது, 2021-ல் அமமுக கூட்டணியில் போட்டியிட்டபோது குறைந்த வாக்குகளை பெற்று ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிகவின் பிரேமதலா களமிறங்கினார். இங்கு 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வென்றார். பாமக இரண்டாம் இடம் பிடித்தது. இதனால் பிரேமலதா டெபாசிட் இழந்தார்.
இது தேமுதிகவுக்கு பெரும் சரிவை கொடுத்தது. கட்சியின் பொதுச் செயலாளராலேயே ஒரு தொகுதியில் வெல்ல முடியவில்லையே என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பிரேமலதா போட்டியிடுகிறார்.
கடந்த முறை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வென்றதை போல் இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு விஜயகாந்தின் நலம் விரும்பிகளுக்கு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications