பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்ட விஜயகாந்த் ரசிகை! சண்முகபாண்டியன் வைத்த பெயர் என்ன தெரியுமா?
சென்னை: "கொம்பு சீவி" திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க வந்த நடிகர் சண்முகபாண்டியனிடம் விஜயகாந்தின் பெண் ரசிகை ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்ட போது அவர் என்ன பெயர் வைத்தார் தெரியுமா?
பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளியான படம் "கொம்பு சீவி". இந்த படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடி கொண்டிருக்கிறது. மதுரையில் வைகை அணை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். அந்த கிராமத்துக்கே முக்கிய நபராக திகழ்கிறார்.

மக்களின் பிரச்சினைகளையும் கட்டப்பஞ்சாயத்து மூலம் சரி செய்து கொடுக்கிறார். இதனிடையே சண்முக பாண்டியன் ஆதரவின்றி இருப்பதை பார்த்த சரத்குமார், அவருக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார். இதையடுத்து இருவரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள்.
சட்டவிரோதமாக கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள், இதனால் போலீஸாரின் பகையை சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில் ஆந்திராவுக்கு கஞ்சாவை விற்பனை செய்ய சரத்குமாரும், சண்முகபாண்டியனும் செல்கிறார்கள்.
அப்போது இவர்களை மடக்கி கையும் களவுமாக பிடிக்க போலீஸார் வலை விரிக்கிறார்கள். இவர்கள் போலீஸிடம் சிக்கினார்களா இல்லையா, என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை. ஆறடி உயரத்துடன் சண்முகபாண்டியன் நன்றாக நடித்துள்ளார்.
இந்த படத்தை பார்க்க சென்னையில் ஒரு தியேட்டருக்கு சண்முகபாண்டியன் வந்திருந்தார். அப்போது அவர் படத்தின் பிரமோஷனுக்காக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அதனை படமாக எடுப்பதற்கு சரியான இயக்குநர் கிடைக்க வேண்டும். அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை அத்தனை சுலபமாக எடுத்துவிட முடியாது.

அதற்கேற்ற இயக்குநர்கள் இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். அப்போது விஜயகாந்தின் ரசிகை ஒருவர் தனது பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு சண்முகபாண்டியனிடம் கேட்டார். அதற்கு அவர் "நானா" என தயங்கினார்.
பிறகு தனது அப்பா, அம்மாவின் பெயர்களை சேர்த்து "விஜயலதா" என பெயரிட்டார். அப்போது அவருடன் இருந்த விஜயகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். சண்முகபாண்டியனின் அண்ணன் விஜய பிரபாகரன் அரசியல் இறங்கியுள்ளார். தம்பியோ சினிமாவில் இருக்கிறார்.
32 வயதாகும் சண்முக பாண்டியன் "சகாப்தம்" என்ற படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து மதுர வீரன், மித்ரன், படைத் தலைவன் உள்ளிட்ட படங்களிலும் குற்றப்பரம்பரை வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். அண்ணன் தம்பி இருவருமே பார்ப்பதற்கு விஜயகாந்த் போல் இருப்பதால் அவர்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications