சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜயகாந்த் அமெரிக்கா போகலையா.. 4 தொகுதிகளில் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணி என்ன?

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இடைத்தேர்தலில் கூட அதிமுக-வுக்கு தான் ஆதரவா?..குமுறும் தேமுதிக தொண்டர்கள்- வீடியோ

    சென்னை: விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா போறதா சொன்னாங்க.. ஆனா இப்போ சத்தமே இல்லாம போய்விட்டது. அத்துடன் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கும் அதிமுகவுக்கு ஆதரவு என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    எம்பி தேர்தலில், ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகள் தவிர அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை பிரச்சார பீரங்கியான பிரேமலதாவுக்கு ஏற்பட்டது. ஏகப்பட்ட சர்ச்சைகள், உளறல்களுடன் பிரச்சாரம் முடிந்தது. மகன்கள் செய்த பிரச்சாரம் பெரிசாக சோபிக்கவில்லை.

    இருந்தாலும் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என தொண்டர்கள் காத்திருந்தனர். அவர்களை மகிழ்விக்க மூன்று இடங்களில் மட்டுமே.. அதுவும் ஒரு நிமிடமே பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த்.

    நில்லுங்கண்ணாச்சி நில்லுங்க.. பதிலை சொல்லுங்கண்ணாச்சி சொல்லுங்க.. ஊட்டியைக் கலக்கிய இமான்!நில்லுங்கண்ணாச்சி நில்லுங்க.. பதிலை சொல்லுங்கண்ணாச்சி சொல்லுங்க.. ஊட்டியைக் கலக்கிய இமான்!

    மனக்குமுறல்

    மனக்குமுறல்

    ஆனால் தேர்தல் முடிந்தபிறகு பிரதான தேமுதிக நிர்வாகிகள் பிரேமலதாவிடம் மனக் குமுறல்களை அள்ளி கொட்டிவிட்டார்கள். "பிரச்சாரத்தில் அதிமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் யாருமே தேமுதிகவுக்காக ஒத்துழைக்கவில்லை.. நாமதான் அவர்களுக்காக பிரச்சாரம் முதல் எல்லா களப்பணிகளும் செய்தோம். ஆனால் நமக்காக யாருமே வரவில்லை. அதனால வரப்போகிற 4 தொகுதி இடைத்தேர்தலில் நாம தனித்தே போட்டியிடலாம். அவங்ககூட சேர வேணாம். கொஞ்சமாவது நமக்கு மரியாதையும், ஓட்டும் கிடைக்கும்" என்று சொன்னார்களாம்.

    திடீர் தகவல்

    திடீர் தகவல்

    இதையடுத்துதான், விஜயகாந்த் அமெரிக்கா செல்ல போகிறார் என்ற ஒரு தகவல் கசிந்தது. இதை தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இப்படி ஒரு தகவல் கசிய என்ன காரணம்? பிறகு ஏன் விஜயகாந்த் போகவில்லை என்றும் தெரியவில்லை.

    ஆதரவு கோரியதா?

    ஆதரவு கோரியதா?

    ஒருவேளை அதிமுகவுக்கு ஒரு ஜெர்க் தருவதற்காக இப்படி ஒரு தகவல் பரப்பப்பட்டதா? அல்லது தனித்து போட்டியிட்டுவிட்டால் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க முடியாது என்பதால், தேமுதிகவிடம் அதிமுகவே ஏதாவது ரகசிய ஆதரவு கோரியதா? அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமானால் "ஒருசில" விஷயங்கள் பேசி முடிக்கப்பட்டதா என தெரியவில்லை.

    கூட்டணி தர்மம்

    கூட்டணி தர்மம்

    ஏனென்றால், "கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக" தேமுதிக பொதுச் செயலாளா் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    புரிந்தால் சரி

    புரிந்தால் சரி

    இப்படி ஒரு அறிவிப்பினால், தேமுதிக தொண்டர்கள் இந்த முறையும் அதிமுகவின் வெற்றிக்காக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் எவ்வளவு உழைத்தாலும், ஜெயிச்சாலும் அதன் பலன் முழுக்க முழுக்க அதிமுகவுக்குதான் போய்சேரும் என்பதை தேமுதிக தொண்டர்களுக்கு தெரிந்தால் சரி!

    English summary
    Vijayakanth has announced, DMDK support to AIADMK for4 constitutenc6y by poll
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X