விஜயகாந்த்துக்கு வந்த டவுட்டு.. "ஆண்களின் திருமண வயது 21 தானா?.. தெரியப்படுத்துங்கள்".. நச் கோரிக்கை
பெண்களின் திருமண வயது குறித்த அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்
சென்னை: ஓட்டுரிமை 18 வயது திருமணத்திற்கு 21 வயதா? என்கின்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதாகவும், அதேபோல் ஆண்களுக்கான திருமண வயது 21 தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கிறது... ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் மோடி, "மகள்கள் மற்றும் சகோதரிகளின் உடல்நலம் குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது..
ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மகள்களை பாதுகாக்க அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்வது அவசியம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியிருந்தார்.

ஒப்புதல்
இதையடுத்து ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பெண்களின் திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன... இந்தக்குழு பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21ஆக உயர்த்த பரிந்துரை செய்தது.. இந்த நிலையில் பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதலும் அளித்துள்ளது..

தாக்கல்
இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதையடுத்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர் அது சட்டமாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரித்ததற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

அறிக்கை
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: பெண்ணின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தேமுதிக வரவேற்கிறது. இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் பெண்கள் முன்னேற்றம் அடைவதுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் பக்குவம் அடைவார்கள். சுயமாக சிந்தித்து எதிர்கால வாழ்க்கையை அவர்களால் சுமூகமாக வழி நடத்திட முடியும்.

அரசாணை
அதே சமயம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சனைக் கொடுமைகள், விவாகரத்துகள் தற்போது அதிகரித்து வருவதாகவும், அவர்களை பாதுகாக்கும் பொருட்டு கிராமப்புற மக்கள் 18 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்ய விரும்புகின்றனர். இளம் பெண்களை வீட்டில் வைத்துக் கொண்டு காலம் தாழ்த்த கிராமப்புற மக்கள் விரும்புவதில்லை. எனவே பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் விவகாரத்தில் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

வயது என்ன?
மேலும் இந்த விவகாரத்தில் கோடிக் கணக்கான பெண்களின் வாழ்க்கை அடங்கி உள்ளதால் மத்திய அரசு தீர்க்கமான நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஓட்டுரிமை 18 வயது திருமணத்திற்கு 21 வயதா? என்கின்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் ஆண்களுக்கான திருமண வயது 21 தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே ஆண்களுக்கான வயது வரம்பில் மாற்றம் வருகிறதா? என்பது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்று கேட்டு கொண்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications