கந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி படிக்கும் வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு எம்மதமும் சம்மதம் எனத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Kandha Sasti Kavasam படிக்கும் Vijayakanth |Oneindia Tamil

    கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தஷ்டி கவசம் குறித்து இழிவுப்படுத்தும் வகையில் பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதோடு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் யார் பேசினாலும் கடும் நடவடிக்கை பாயும் என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

    Vijayakanth who read Kandha sashti kavasam

    இந்நிலையில் கந்தசஷ்டி கவசத்தை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;

    ''வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும் கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்தசஷ்டி கவசம் படித்தேன் '' எனத் தெரிவித்துள்ளார்.

    ''ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுப்படுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்.'' என விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும், # தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா என்ற ஹேஷ்டேக்கையும் தனது பதிவுடன் அவர் இணைத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+