சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர் ட்விஸ்ட்.. "2016".. திமுகவை இப்படி மிஸ் பண்ணிருச்சே தேமுதிக.. பேசாம இருந்திருக்கலாம்!

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்திருக்கலாம்

Google Oneindia Tamil News

சென்னை: 2016-ல் எப்படி திமுகவை தேமுதிக மிஸ் பண்ணியதோ, இந்த முறையும் அதே தப்பை செய்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது.. காரணம், நம் வாசகர்கள் அப்படி ஒரு ஷாக் விஷயத்தை தெரியப்படுத்தி உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொர்ண்டிருக்கிறது.. ஆனால் தேமுதிக தரப்பில் விஜயகாந்த் பழையபடி இல்லாமல் பிரச்சாரம் தடுமாறி கொண்டிருக்கிறது..

எனவே, "தேமுதிகவுக்கு விஜயகாந்த் பிரச்சாரம் செய்து பேசாதது பலவீனமாகியிருக்கிறதா?" என்ற கேள்வியைதான் நம் வாசகர்களிடம் முன்வைத்தோம்.

வாசகர்கள்

வாசகர்கள்

அதற்கு "ஆம்" என்று 58.47 சதவீதம் பேரும், "அப்படியெல்லாம் இல்லை" என்றும் 8.47 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். அதேபோல "தனித்து போட்டியிருக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 3.44 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். "அதிமுகவை விட்டு வந்தது தப்பு" என்ற ஆப்ஷனுக்கு 11.38 சதவீதம் பேரும், "திமுகவுடன் சேர்ந்திருக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 18.25 சதவீதம் வாசகர்களும் வாக்களித்துள்ளனர்.

கணிப்புதான்

கணிப்புதான்

இது நம் வாசகர்களின் ஒரு கணிப்புதான்.. இதன் அடிப்படையிலேயே பார்த்தாலும், விஜயகாந்த் தான் அந்த கட்சிக்கு பலம் என்பதைதான் கணிப்பு சொல்கிறது.. 58.47 சதவீதம் பேர் விஜயகாந்த் பேசாததை குறிப்பிட்டு சொல்லுகிறார்கள்.. இப்போது விஜயகாந்தின் மவுன பிரச்சாரம் சுத்தமாக எடுபடவில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது... விஜயகாந்த் என்ற நபரை மட்டுமே நம்பி இந்த கட்சி இன்னமும் உள்ளது என்பது அதற்கு மேலும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிறது.

 தனித்து போட்டி

தனித்து போட்டி

அதேசமயம், தேமுதிக என்ற கட்சி மீது மக்களுக்கு பெரிய ஆர்வமும், எதிர்பார்ப்பும், ஆதரவும் இல்லை என்றும் தெரிகிறது. அதனால்தான் "தனித்து போட்டியிட்டிருக்கலாமா" என்று கேட்டதற்கு, வெறும் 3.44 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. எப்போதுமே தேமுதிக தனித்து போட்டியிடும் திறன் உள்ள கட்சி கிடையாது, அது வேறு ஏதாவது ஒரு பெரிய கட்சியின் தோளில் ஏறியே தேர்தலை சந்திக்கும் கட்சி என்பதே இதன் அர்த்தமாகிறது.

 பெரிய மைனஸ்

பெரிய மைனஸ்

ஆனால், அதிமுகவில் இருந்து விஜயகாந்த் வெளியே வந்தது, தேமுதிகவுக்கு பெரிசாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. அதேசமயம், அது அதிமுகவுக்குதான் மைனஸாக அமைந்துள்ளது.. இதைதான் நம் வாசகர்கள் "அதிமுகவை விட்டு வந்தது தப்பு" என்ற ஆப்ஷனுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.. 11.38 சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளனர். இதில் எதிர்பாராத ட்வீஸ்ட் திமுகதான்.. "திமுகவுடன் சேர்ந்திருக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 18.25 சதவீதம் பேர் ஓட்டு போடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

திமுக

திமுக

ஒருவேளை திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்காமல் விட்டது மிகப்பெரிய தவறு என்றுகூட இப்போது யோசிக்க தோன்றுகிறது.. திமுக இப்படி வெற்றி வாய்ப்புகளை கருத்து கணிப்புகளில் பெற்று வருவதை பார்த்தால், பிரேமலதா அவசரப்பட்டு விட்டாரோ என்றுகூட தோன்றுகிறது.. ஏனென்றால், அன்றே திமுகவுடன் கூட்டணி வைக்க சுதீஷூக்கு ஒரு விருப்பம் இருப்பதாகவும், ஆனால், பிரேமலதாதான் திமுகவுடன் வேண்டாம், ராஜ்ய சபா சீட் பற்றி அதிமுகவில் இருந்தால்தான் பேச முடியும் என்று சொன்னதாக செய்திகள் கசிந்தன.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அதிமுகவில் இருந்து வெளியே வந்தபிறகுகூட திமுகவுடன் மறுபடியும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.. இதில் 10 சீட் வரை தருவதற்கு திமுக தயாராக இருந்த நிலையில், தேமுதிகவின் "இதர" கண்டிஷன்களை திமுக ஏற்க முடியாது என்று சொல்லியதுடன், கூட்டணி கதவையும் இழுத்து மூடியது..

 மிஸ் பண்ணிருச்சோ?

மிஸ் பண்ணிருச்சோ?

ஒருவேளை, 10 சீட்டை தேமுதிக பெற்றுக் கொண்டு, இன்று களம் கண்டிருந்தால், நிச்சயம் வெற்றியை நோக்கி நடைபோட்டிருக்கும்.. விஜயகாந்த்துக்கும் கொஞ்சம் திருப்தியாகவும், நிம்மதியாகவும் இருந்திருக்கும்.. எப்படி 2016-ல் திமுகவை மிஸ் பண்ணியதோ, இந்த முறையும் திமுகவை தேமுதிக மிஸ் பண்ணிவிட்டது என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

English summary
Vijayakanths DMDK should have an alliance with the DMK this Assembly Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X