சண்டையில் வார்த்தையை விட்ட வடிவேலு! வெளுத்த விஜயகாந்த் உறவினர்கள்.. மோதலின் பிளாஷ்பேக்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் வடிவேலுவுக்கு ஏற்பட்ட மோதல் குறித்து நடிகர் தியாகு அளித்த தகவல்கள் என்ன தெரியுமா?
நடிகர் விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி காய்ச்சல், இருமல், நுரையீரல் தொற்று காரணமாக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் அவர் வழக்கமான பரிசோதனைக்காகவே வந்துள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நவம்பர் 29ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. அதில் அவருக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதாகவும் இதற்காக அவருக்கு 14 நாட்கள் சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் வழக்கமான பரிசோதனைக்காக மியாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் நினைவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை குறித்து நடிகர் தியாகு சொன்ன தகவல்களை பார்க்கலாம்.
அவர் கூறுகையில் வடிவேலுவும் விஜயகாந்தும் மதுரைக்காரர்கள். சின்னகவுண்டர் படத்தில் விஜயகாந்துக்கு வடிவேல் குடை பிடித்துக் கொண்டு வருவார். அவருக்கு சம்பளம் ரூ 250. திடீரென வடிவேலுக்கு வசதி வந்துவிட்டது. இதனால் விஜயகாந்த் இருக்கும் தெருவில் வீடு வாங்கினார்.
விஜயகாந்தின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு வடிவேலின் வீட்டிற்கு எதிர் வீடு. துக்கம் விசாரிக்க வந்த சொந்தக்காரர்கள் வடிவேல் வீட்டுக்கு முன்பக்கம் வாகனத்தை நிறுத்தினர். இதனால் வடிவேல் கோபப்பட்டு வண்டியை எடுக்குமாறு கூறினார். சடலத்தை எடுத்தவுடன் வண்டியை எடுத்துவிட்டு புறப்படுவோம் என விஜயகாந்த் உறவினர்கள் கூறினர்.
விஜயகாந்த்ன்னா பெரிய இதுவா என வடிவேல் எதையோ சொல்லிவிட்டார். உடனே ஆத்திரமடைந்த உறவினர்கள் வடிவேலை அடித்துவிட்டார்கள். தேர்தலின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்பு விஜயகாந்தை வடிவேல் தரக்குறைவாக பேசியது பெரும் வேதனையை அளித்தது. அத்தோடு வடிவேலுவின் திரைப்பயணம் முடிந்தது என்றார் தியாகு.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications