விஜயகாந்துக்கு கொரோனா.. உடல்நிலை பின்னடைவு.. மியாட்டில் போலீஸார் குவிப்பு.. தேமுதிகவினர் கவலை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனை முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அண்மைக்காலமாக உடல் நிலை சரியில்லாத நிலை உள்ளது. இதனால் அவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் காரணமாக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கிட்டதட்ட 15 நாட்களுக்கு மேல் சிகிச்சை மேற்கொண்டார். நடுவே அவரது உடல்நிலை சற்றுநிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து தேமுதிக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அங்கு விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து மக்கள் கடுமையாக வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் வழக்கமான பரிசோதனைக்காக மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது சளி மாதிரியை எடுத்து சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications