Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Diya pregnant: கொள்ளு தாத்தாவாகிறார் நடிகர் விஜயகுமார்! குட் நியூஸ் சொன்ன பேத்தி தியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா தற்போது கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். குழந்தையின் வளர்ச்சி குறித்து அறியும் ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் தியாவும் அவரது கணவர் திலனும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். விஜயகுமார் கொள்ளுத்தாத்தாவாகிறார் என்பதால் அவரும் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

விஜயகுமாரின் மகள் அனிதா. இவர் ஒரு மருத்துவர், இவர் தன்னுடன் படித்த கோகுல கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா, ஸ்ரீஜெய் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். தியா மருத்துவம் படித்துள்ளார். தற்போது லண்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அங்கு தன்னுடன் பணியாற்றும் திலன் என்பவரை காதலித்து வந்தார்.

Vijayakumar

இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திலன் என்பவருடன் தியாவுக்கு திருமணம் நடந்தது.

இதையடுத்து தியா, கணவருடன் லண்டனில் செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில் தியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் இருவர் மூவராக போகிறோம். விரைவில் குட்டி பாப்பா வர போகிறார் என இருவரும் மரங்கள் நிறைந்த பகுதியில் தங்களது புதுவரவை நினைத்து கொண்டாடி வருகிறார்கள்.

தியாவுக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தாய்மாமன் ஸ்ரீஜெய், குட்டி குழந்தையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தியா - திலனின் திருமணம் சென்னை மாமல்லபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிகவும் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தியா துபாயில் வளர்ந்து லண்டனில் படித்திருந்தாலும் விடுமுறைக்கு சென்னை வரும் போது தனது தாய்மாமா அருண் விஜய்யுடன் அதிக நேரத்தை செலவிடுவாராம். தான் பார்த்து வளர்ந்த குழந்தை தியாவை மணக்கோலத்தில் பார்த்த அருண் விஜய் கண்கலங்கிவிட்டார்.

விஜயகுமார் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் 1976 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த மஞ்சுளாவை விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

இவர்களில் அனிதா, கவிதாவை தவிர மற்ற அனைவரும் திரைத்துறையில் இருக்கிறார்கள். அனிதா மருத்துவர், தற்போது இன்ஸ்டாவில் நிறைய மருத்துவ குறிப்புகளை கொடுத்து வருகிறார். அவ்வப்போது தோழிகளுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை வெளியிடுவார். அது போல் மகள் தியாவுடனும் நிறைய இடங்களுக்குச் செல்வதுண்டு.

தற்போது அனிதா பாட்டியாவதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். பாட்டியாவதால் அவரை அவரது தோழிகள் கிண்டல் செய்து வருகிறார்களோ என்னவோ! அருண் விஜய் மாமா தாத்தா!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+