காங்கிரஸ் டூ காவி.. விஜயதாரணி இப்படி மாறிட்டாரே! மோடி, பாஜக மீதான விமர்சனங்கள் லிஸ்ட் -அது போன வாரம்
சென்னை: விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைந்து இருக்கும் நிலையில் இதற்கு முன் அவர் பாஜகவுக்கு எதிராக பேசிய கருத்துக்களின் தொகுப்பை பார்ப்போம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக தனியார் இதழுக்கு பேட்டியளித்த அவர், "காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாஜக. ஆனால் கர்நாடக தேர்தலுக்காக தள்ளிக்கொண்டே செல்கிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாஜகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதை பார்த்தால் மத்திய அரசின் இயலாமை தெரிகிறது. இயலாமையை காட்டுபவர்கள் ஆட்சிக்கு தகுதியுள்ளவர்களா?

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நாடகம் ஆடவில்லை. மத்தியில் உள்ள பாஜக அரசுதான் நாடகம் ஆடுகிறது. காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பு வரும் என்று அஞ்சுகின்றனர். மறு பக்கம் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க முடியாமல் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். உலகம் சுற்றி வந்த மோடியால் தனது நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை செயல்படுத்த முடியவில்லை. அவரே உண்ணாவிரதம் செய்கிறார் என உலகத் தலைவர்கள் நகைக்கின்றனர்." என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு விஜயதாரணி தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், "காங்கிரஸ் வேண்டாம் என்று சொன்ன மோடி தற்போது காங்கிரஸை ஊக்குவிக்கும் நிலையில் வந்திருக்கிறார். காங்கிரஸ் இன்றி ஆளும் கட்சியால் எதையும் சாதிக்க முடியாது என பிரதமர் உணர்ந்து இருக்கிறார். காங்கிரஸ் இந்த நாட்டுக்குக் தேவை என்பதை உணர்ந்தவர்களில் மோடியும் அடக்கம். மோடி 2 நாட்கள் எங்களுக்குக் கூறிய அறிவுரையை ஏற்றுக்கொள்கிறோம். தொடர்ந்து எங்களுக்கு அறிவுரை செய்வது, எங்களை விமர்சிப்பதை தவிர்த்து நாட்டு மக்கள் மீதும் கவனம் செலுத்துங்கள்." என்று தெரிவித்து இருந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு விஜயதாரணி பாஜகவில் இணைவார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், அப்போது அவர், "நான் நெருப்பு. என்னை பாஜகவால் நெருங்கவே முடியாது." என்று தெரிவித்து இருந்தார்.
அதே 2020 ஆம் ஆண்டில் பாஜகவுக்கு செல்லப்போவதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த விஜயதாரணி, "நான் ஏன் பாஜகவுக்கு போகிறேன்? காங்கிரஸில் எனக்கு 2 முறை எம்.எல்.ஏ பொறுப்பு கிடைத்துள்ளது. அடுத்து எம்.பி பொறுப்பு கேட்டு இருக்கேன். அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொறுப்பில் உள்ளேன். பாஜகவில் சேர எனக்கு என்ன அவசியம் வந்தது? கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு சீட் கேட்டுள்ளேன். எனக்குக் சீட் கொடுக்கக்கூடாது என்று கட்சிக்கு உள்ளே இருந்தோ அல்லது பாஜகவில் இருந்தோ வதந்தி பரப்பி இருக்கலாம்." என்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயதாரணி, "மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து அரிசி, காய்கறிகள் விடுவிக்கப்படலாம்." என்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தனியார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழ்நாடு எப்போதும் பாஜகவை ஆதரிக்காது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பாஜகவுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டி உள்ளனர். திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியைப் யாராலும் பிரிக்க முடியாது. பாஜக சதி வலைகளை விரிக்கிறது. தமிழ்நாட்டில் குஷ்புவின் கனவு பலிக்காது. திமுக கூட்டணி ஒற்றுமையாக தேர்தலில் நின்று பாசிச சக்திகளைத் தூக்கி எறியும்." என்றார்.
கடந்த 17 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜயதாரணி, "பாஜகவில் இணையப்போவதாக செய்தி வருவது ஆச்சரியமாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பாக டெல்லிக்கு வந்துள்ளேன். பாஜகவில் யாரோடும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்று அக்கட்சியில் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை." என்று தெரிவித்து இருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications