Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதுங்க.. பல்ப் கொடுத்த பாஜக! விஜய் கட்சிக்கு தாவும் விஜயதரணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலகியவர் விஜயதரணி. விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏவான அவர் பாஜகவில் தனக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால் தற்போது வரை எந்த பதவியும் வழங்கப்படாத நிலையில் அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் திமுக, அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி தொடர்ந்து மூன்று முறை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் திடீரென அவர் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற போது தனக்கு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் செல்வப்பெருந்தகை அந்த இடத்தை பிடித்துக் கொண்டார்.

Vijayatharani Actor Vijay TVK

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியையும் அவர் குறி வைத்து காய்களை நகர்த்தி வந்தார். தொடர்ந்து கேஎஸ் அழகிரி வசம் இருந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியும் செல்வப் பெருந்தகைக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், தமிழக சட்டமன்ற குழு தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்த்தார் விஜயதாரணி.

ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான கோபத்தில் இருந்த விஜயதாரணி குறித்து அறிந்து கொண்டனர் பாஜக தலைவர்கள். இதை அடுத்து அவரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைய வைத்தனர். இதற்காக பல நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த விஜயதாரணி ஒரு வழியாக பாஜகவில் இணைந்தார். கன்னியாகுமரி தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அந்த சீட்டு வழங்கப்பட்டது.

இதனால், நாடாளுமன்ற எம்பி சீட்டு கிடைக்கும் என காத்திருந்த விஜயதாரணிக்கு அதிர்ச்சியே கிடைத்தது. அதை தொடர்ந்து விளவங்கோடு சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில், எம்எல்ஏ சீட் விஜயதாரணிக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனாலும் அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று முறை எம்எல்ஏவாக இருந்து இரண்டு வருட கால பதவியை விட்டுவிட்டு பாஜகவில் சேர்ந்தும் தனக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதால் மிகுந்த அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷாவை நேரில் சந்தித்து தனது பிரச்சனைகளை எடுத்துக் கூறினார்.

இருந்த போதும் விஜயதாரணிக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தன்னைத் தவிர கட்சியில் வேறு யாரும் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சில நிர்வாகிகளை ஓரங்கட்டியதாக புகார் எழுந்த நிலையில் அதில் விஜயதாரணியம் ஒருவர் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் தனக்கு மாநில துணைத்தலைவர் பதவி அல்லது பொதுச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

ஆனாலும் தற்போது வரை அதற்கான அறிகுறிகள் இல்லை. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட இருக்கிறது. இப்படியாக மாத கணக்கில் காத்திருந்த தன்னை பாஜக ஏமாற்றியதால் அதிருப்தியில் இருக்கிறார் விஜயதரணி. இருந்த எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்ட நிலையில் தனக்கு எந்த பொறுப்பும் வழங்காமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது என வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் விஜயதரணி இணைய போவதாகவும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாவட்ட அளவில் தவெகவில் தெரிந்த முகங்கள் இருந்தாலும் தென் மாவட்டங்களில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே இருக்கிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரியில் விஜயின் கட்சியை வலுப்படுத்த விஜயதரணிக்கு பொறுப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் பாஜகவில் தனக்கான இடத்தை பெற திமுக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விஜயதாரணியின் ஆதரவாளர்கள் தகவல் கசிய விட்டு இருக்கின்றன

இது ஒரு புறம் இருக்க அது போன்ற தகவல்களை மறுத்திருக்கிறார் விஜயதரணி. சரத்குமார், குஷ்பூ பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய பொறுப்பு இல்லை. தேசிய கட்சி என்பதால் நீண்ட ஆலோசனைக்கு பிறகு பொறுப்பு வழங்கப்படும். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+