மகன் சண்முகப்பாண்டியன் பிறந்தநாள்... கேக் ஊட்டி வாழ்த்திய விஜயகாந்த் - குறையாத கம்பீரம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் பிறந்தநாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் பிறந்தநாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. கேக் ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் விஜயகாந்த்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். இரண்டு பேரும் அரசியலுக்கு வரலாமா?, வேண்டாமா? என்று யோசனை செய்து கொண்டிருந்த காலத்திலேயே களத்தில் இறங்கி கலக்கியவர்.
முதல் தேர்தலிலேயே விஜயகாந்திற்கு மக்களிடம் கிடைத்த செல்வாக்கு அளப்பறியது. அப்படி சினிமா, அரசியல் என இரண்டு விஷயங்களில் சாதித்த விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் விஜய பிரபாகரன் அப்பாவிற்கு துணையாக அரசியலில் களம் இறங்கியுள்ளார். இளைய மகன் சண்முகபாண்டியன் அப்பாவைப் போலவே சினிமாவில் சாதித்துக்காட்ட வேண்டும் என முயன்று வருகிறார்.

சண்முகப்பாண்டியன்
விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன், 'சகாப்தம்' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இது சண்முகப்பாண்டியனுக்கு திறமையை வெளிப்படுத்தும் படமாக அமையவில்லை. இதைத் தொடர்ந்து வெளியான 'மதுரவீரன்' திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடம், சிறந்த நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று தந்தது.

விஜயபிரபாகரன்
விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனும் தன் அப்பா வழியில் நடிகராகவிருக்கிறாராம். பேட்மிண்டன் அணியின் உரிமையாளராக இருக்கும் விஜய பிரபாகரன் அப்பாவுக்கு ஆதரவாக அரசியல் வேலையை பார்த்து வருகிறார். லாக்டவுன் நேரத்தில் வீட்டில் சும்மா இருந்தபோது தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியான விஜயபிரபாகரனும் நடிக்கப் போகிறார்.

சண்முகப்பாண்டியன் பிறந்தநாள்
உடல் நல பாதிப்பினால் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் விஜயகாந்த் தற்போது அறிக்கை மட்டும் வெளியிடுகிறார். இந்த நிலையில் இளைய மகன் சண்முகப்பாண்டியனின் பிறந்தநாளை எளிமையான முறையில் மனைவி பிரேமலதா, மூத்த மகன் விஜயபிரபாகரனுடன் கொண்டாடியுள்ளார். அந்த போட்டோக்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

வெற்றிச்சின்னம்
விஜயகாந்த் உடல் இளைத்து காணப்படுகிறார் என்றாலும் சிவப்பு நிற டி சர்ட்டில் பழைய கம்பீரம் குறையாமல் இருக்கிறார். இரண்டு மகன்களும் முத்தம் கொடுக்க அந்த போட்டோவையும் பதிவிட்டுள்ளார். மகன்களுடன் வெற்றிச்சின்னத்தையும் காட்டுகிறார் விஜயகாந்த். அரசியலையும் தாண்டி விஜயகாந்துக்கு இன்றைக்கும் மாறாத ரசிகர்கள் பலர் உள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications