விஜய் ஏற்படுத்த போகும் தாக்கம்.. தவெகவின் திமுக எதிர்ப்பு கை கொடுக்குமா.. இந்தியா டுடே சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வெற்றிக்கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்யின் அரசியல் முற்றிலும் திமுகவிற்கு எதிராக மட்டுமே நகர்வதை காண முடிகிறது. அவருடைய ஒவ்வொரு அரசியல் நகர்வும், அறிக்கையும், திமுகவை கடுமையாக விமர்சிப்பதாகவும், திமுக செயல்பாடுகளை கேள்வி கேட்பதாகவும் உள்ளது. இந்த சூழலில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து இந்தியா டுடே கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து விளக்கி உள்ளது.

வரும் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது. அதற்கு இப்போதே அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், இவர்களில் 3.11 கோடி ஆண், 3.24 கோடி பெண் மற்றும் 9,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் சில லட்சங்கள் உயர வாய்ப்பு உள்ளது. புதிய வாக்காளர்கள் மட்டுமே 9 லட்சம் என்கிறதாக இருக்கிறது.

Vijay s impact Will Tvk s DMK opposition help What does India Today say

விக்கிரவாண்டி மாநாடு

ஒட்டுமொத்தமாக இளைஞர்கள் வாக்குகள் தான் அரசியலை தீர்மானிக்கும் என்கிற அளவில் 18 முதல் 39 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இந்த சூழலில் தனது சினிமா பலத்தை நம்பி, நடிகர் விஜய் அரசியலில் இறங்கினார். அவர் விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது முதல் இப்போது வரை நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றும் திமுகவை கடுமையாக விமர்சிப்பதாகவும், திமுகவை கேள்விகேட்பதாகவும் இருக்கிறது. அதேநேரம் அதிமுக மற்றும் பாஜக குறித்து பெரிய விமர்சனங்களை நேரடியாக விஜய் முன் வைக்கவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள் திமுகவினர்.

இது ஒருபுறம் எனில், நடிகர் விஜய் தனது அரசியலை ஆரம்பித்ததே திமுகவிற்கு எதிராக மட்டுமே என்பது போன்ற பிரச்சாரங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாஜகவின் பி என்றும், அதிமுக கூட்டணியில் விஜய் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விமர்சிக்க தொடங்கி உள்ளன. ஆனால் அதற்கு வலுவான எதிர்ப்பையோ அல்லது விமர்சனகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசியல் அணுகுமறையையோ இதுவரை தவெக முன்னெடுக்கவில்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

விஜய் ஏற்படுத்த போகும் தாக்கம்

என்னதான் திமுக, நடிகர் விஜய்யின் தவெகவை பாஜகவின் பி டீம் என்று விமர்சனங்களை முன் வைத்தாலும், இந்த முறை அரசியலில் அவர் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே கருத்துக்கள் உள்ளன. தவெக தனித்து போட்டியிட்டு தனது வாக்கு சதவீதத்தை நிரூபிக்க விரும்பும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் திமுக, அதிமுகவைப் போல் கிராமங்களில், வார்டு வாரிய விஜய் ரசிகர்கள் இருப்பது தவெகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா டுடே கணிப்பு

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து இந்தியா டுடே கணிப்பில் தெரிவித்துள்ளது. இந்தியா டுடே தனது கணிப்பில் கூறுகையில், நடிகர் விஜய், நிச்சயமாக, அரசியலில் ஒரு எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்ப உள்ளது. அவரது கட்சி அதிகளவில் இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. ஆனால் தேர்தல் ரீதியாக அது வாக்குகளாக மாறுமா? என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறியுள்ளது. நடிகர் விஜய், அரசியல் வலுவான வாக்குசதவீதம் பெற்றால், அது திமுக எதிர்ப்பு வாக்குகளாக இருக்கும் என்பதால், இவர் தனித்து நிற்பதுமே, அதிமுக, பாஜகவிற்கு பாதகமாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+