மொத்த அயோக்கியன்களும் ஒன்றாக நிற்கிறாங்க.. அவங்க ஜெயிக்க கூடாது... ஜனநாயகன் டிரெய்லரில் அரசியல் வசனம் ஏராளம்!
சென்னை: நடிகர் விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்' ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான டிரெய்லர் இன்று வெளியானது. இதில் அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, ‛‛மொத்த அயோக்கியன்களும்.. மொத்த அயோக்கியன்களும் ஒன்றாக நிற்கிறாங்க.. அவங்க ஜெயிக்க கூடாது.. I am coming'' என்பது உள்பட பல வசனங்கள் உள்ளன. டிரெய்லரில் இடம்பெற்ற அரசியல் சார்ந்த வசனங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்க உள்ளது. இதற்கான பொதுக்கூட்டம், பிரசாரங்களை தவெக தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் விஜய் முழு நேரமாக அரசியலுக்கு வருகிறார். இதனால் திரைப்பட நடிப்புக்கு ‛குட்பை' சொல்லி உள்ளார். தற்போது விஜய் ‛ஜனநாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தான் அவரது கடைசி படமாகும். அதன்பிறகு திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று விஜய் அறிவித்துள்ளார்.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த ‛ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி தியேட்டரில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் மலேசியாவில் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் தான் ‛ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் கொண்டாட தொடங்கி உள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் டிரெய்லரில் அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சிகளை தாக்கும் வகையிலான வசனங்கள் உள்ளன.
ஜனநாயகன் டிரெய்லரில், ‛‛மொத்த அயோக்கியன்களும் ஒன்னா நிற்கிறாங்க. அவங்க ஜெயிக்க கூடாது'' என்று விஜய் வாய்ஸில் வசனம் இடம்பெற்றுள்ளது. இது விஜய்க்கு எதிராக கூட்டணியாக இருக்கும் அரசியல் கட்சியினரை தாக்கும் வகையில் உள்ளது. அதேபோல், பிரகாஷ் ராஜ், விஜயை பார்த்து, ‛‛உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. விலகி போ'' என்ற வசனம் உள்ளது.
அதேபோல் விஜயின் புகழை பேசும் வகையில், ‛‛மக்கள் அவனை கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.. இப்போ கொன்றால் மக்கள் அவனை கடவுளாக்கிவிடுவார்கள். அவனை உயிர்தெழ முடியாத சிலுவையில் அறைய வேண்டும்'' என்ற வசனம் உள்ளது. அதேபோல், விஜய் வாய்ஸில், ‛‛உன்னை காலி பண்ணிடுவேன்.. அசிங்கப்படுத்திருவாங்கனு எவன் சொன்னாலும் சரி.. திரும்பி போற ஐடியாவே இல்லை'' என வருகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் கூட 2026 சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியடைந்தால் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்றுவிடுவார் என்று சிலர் கூறி வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் அவர் அசிங்கப்படுவார் என்று சிலர் கூறி வரும் நிலையில் அதற்கும் டிரெய்லரில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ‛‛ I Am Coming'' என்று விஜய் வாய்ஸில் வருவதோடு ‛‛மக்களுக்கு நல்லது பண்றதுக்கு அரசியலுக்கு வாங்கடானா.. கொள்ளையடிக்கவும், கொலை பண்ணவும் அரசியல் வர்றீங்க..'' என்று அந்த வசனம் உள்ளது. இது நேரடியாக தற்போதைய அரசியல் கட்சிகளை சீண்டும் வகையில் உள்ளது.
இப்படியாக ஜனநாயகன் டிரெய்லரில் அரசியல் சார்ந்த வசனங்கள் நிறைய உள்ளன. இதனால் இந்த திரைப்படத்திலும் அரசியல் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி சில முக்கியமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
-
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications