நான் ரெடி தான் வரவா? 2026 தேர்தலில் விஜய் எங்கே போட்டி தெரியுமா? ’V' செண்டிமெண்ட்.. டிக் அடித்த டீம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறார். தனது கடைசி படத்தை முடித்துள்ள அவர் அடுத்த மாதத்தில் இருந்து கள அரசியல் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழக முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் 2026 தேர்தலில் விஜய் எங்கு போட்டியிடப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது அங்கெல்லாம் அவரது செல்வாக்கு குறித்து ரகசிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
தமிழக அரசியலில் புதிய வரவாக விஜய் வந்திருக்கிறார். நடிகராக இருந்து ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி தற்போது அரசியல் கட்சியாக உருவாக்கி இருக்கிறார். தமிழகம் முழுவதும் 120 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தொடர்ந்து மாநகரம், நகரம், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். ஒர்க் ஃப்ரம் ஹோம் விமர்சனம் எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்தது, கோவையில் பிரம்மாண்டமான பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் என மாஸ் காட்டினார்.

தொடர்ந்து சூட்டிங்கில் கலந்து கொள்ள திண்டுக்கல் செல்லும் வழியில் மதுரைக்கு வந்த விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதை பார்த்து அதிமுகவும் திமுகவும் சற்று மிரண்டு போனது உண்மைதான். மதுரையும், கோவையும், திண்டுக்கல்லும் கொடுத்த வரவேற்பை கண்டு உற்சாகமடைந்த விஜய் அடுத்ததாக காஞ்சிபுரம், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தனியே நடந்து கொண்டிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க நவம்பர் மாத இறுதியில் இருந்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ந்து தேர்தல் நடக்கும் போதும் ஒவ்வொரு தொகுதியிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கான பிரச்சார வியூகங்கள் விஜயின் பயணத்திட்டம் தற்போதே தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
விஜயை பொறுத்தவரை 'வி' சென்டிமென்ட் அவருக்கு இருக்கிறது. விஜய், வெற்றி கழகம், விக்கிரவாண்டி மாநாடு என விஜய் தனது முதல் பயணத்தை வி என எழுத்தில் தொடங்கும் பகுதிகளில் இருந்தே ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் விஜய் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி, விருதுநகர், வேதாரண்யம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவது உறுதி என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
இதை அடுத்து நான்கு தொகுதிகளிலும் விஜயின் செல்வாக்கு குறித்து ஆதவ் அர்ஜுனாவின் குழுவினர் ஆய்வில் இறங்கி உள்ளனர். பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், வியாபாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 18 முதல் 30 வயது, 30 முதல் 40 வயது, 40 முதல் 60 வயது என வயது வித்தியாச ரீதியிலும், சாதி, சமுதாயம் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பல்வேறு குழுக்களிடம் விஜய் டீம் சர்வே எடுத்து வருகிறது. இதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வேதாரண்யம் ஆகிய மூன்று தொகுதிகளில் விஜய்க்கு அதிக செல்வாக்கு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த மூன்று தொகுதிகளில் நிச்சயம் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதி என்கின்றனர்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications