இதுதான் மேட்டரா? திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்.. கூர்ந்து கவனிக்கும் விஜய், கூட்டணி கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது துவங்கியிருக்கிறது.. இதில் திமுகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.. வரப்போகும் தேர்தல் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

வருகிற 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.. இதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றாலும், அதற்கான திட்டப்பணிகள் தமிழக அரசியல் கட்சிகளிடம் ஆரம்பமாகி வருகின்றன.

DMK Vijay stalin

இன்று கூட்டம்: அந்தவகையில், திமுகவும் இப்போதிருந்தே தன்னுடைய பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.. இன்றைய தினம் அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டமும் நடைபெற உள்ளது..

இந்த கூட்டம் குறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.. அதில், "மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.11.2024 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியூகங்கள்: தேர்தல் குறித்த முன்னேற்பாடுகள் பற்றி இந்த உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சில வியூகங்களையும் வகுத்து ஆலோசனை செய்யலாம் என்று தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் செயல்பாடுகள் வேகம் எடுத்துள்ளன.. கூட்டணி ஆட்சி குறித்த பேச்சும் அடிபட்டுள்ளது.. இதுபோலவே, விசிக, பாமகவிலும் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுக்கள் எதிரொலிக்க துவங்கியிருக்கின்றன. எனவே, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி என்பது பெரும்பாலான தமிழக கட்சிகளின் முக்கிய முழக்கமாக இருக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு: ஆனால், இதனை திமுக, அதிமுக இரு பிரதான கட்சிகளும் ஏற்குமா என்று தெரியவில்லை.. அதேபோல, இப்போதுள்ள கூட்டணி கட்சிகளுமே, அடுத்த தேர்தலிலும் நீடிக்குமா? என்று தெரியவில்லை.. அல்லது தேர்தல் நேரத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்துமா? என்றும் தெரியவில்லை. இப்படிப்பட்ட திமுக தன்னுடைய உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை இன்று கூட்டியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது.. இதில் திமுகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.. திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டம் இன்று கூடியிருக்கிறது. இதில், வரப்போகும் தேர்தல் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதேபோல, தேர்தல் பணியில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+