காங்கிரஸ், விசிகவுக்கு கை கொடுக்கும் விஜய்.. திமுகவுக்கு தான் சிக்கலே! 2026ல் இதுதான் நடக்கப்போகுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் அரசியல் சூடுபிடித்துள்ளது காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகளுக்கு பிளஸ் ஆக மாறியுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், விசிகவுக்கும் விஜய் உதவப் போகிறாராம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், "தமிழக வெற்றிக் கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, விஜய்யின் அரசியல் நகர்வுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. நேரிடையாகவே விஜய் அரசியல் பேசி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Vijay TVK Congress VCK

விஜய் அரசியல் பேச்சுகள்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறார் விஜய். சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜய்யின் உதவித்தொகை வழங்கும் விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய விஜய், மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டார். மேலும், ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது என்றும் விமர்சித்தார். பன்முகத்தன்மை தான் பலம் என்று குறிப்பிட்ட விஜய், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் நடத்தப்படும் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேட்டால் அதன் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விட்டதாகவும் விஜய் கூறினார். நீட் விலக்கு மட்டுமே இதற்கு தீர்வு என்று கூறிய விஜய், நீட்டிற்கு எதிராக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம், பாஜகவுக்கு எதிரான கருத்துகளைப் பேசியுள்ளார் விஜய்.

திருமா - ராகுல் - விஜய்: முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், தமிழ்நாட்டில் 40க்கு 40 வென்ற திமுக கூட்டணிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. விஜய்யின் பிறந்தநாளுக்கு திமுக தவிர மற்ற அனைத்துக் கட்சி தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

இதனால், திமுகவுக்கு எதிரான அணியையே விஜய் கட்டமைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. அண்மையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக தேர்வான ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடன் விஜய் இணக்கத்தை விரும்புகிறாரா என்ற விவாதங்கள் எழுந்தன. விஜய்க்கு ராகுல் காந்தியும் நன்றி தெரிவித்தார்.

காங்கிரஸ், விசிகவுக்கு மவுசு: இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகையால் காங்கிரஸ், விசிகவுக்கு மவுசு கூடும் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது. 2019 லோக்சபா தேர்தலோடு ஒப்பிடுகையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது. பாஜக, அதிமுக ஆகியவை தனித்தனி அணிகளாக களமிறங்கியதால், திமுக கூட்டணியின் ஓட்டுகள் சிதறி உள்ளன.

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இறங்குவதால், திமுக வாக்குகள் மேலும் சிதறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வலிமையான கூட்டணியை கட்டமைக்க வேண்டிய சூழலுக்கு திமுக தள்ளப்படும்.

2026ல் இதுதான் நடக்கப்போகுதாம்: அப்படி நடக்கும்போது, காங்கிரஸ் கட்சியும், விசிகவும் தங்கள் பேர வலிமையை கூட்டும் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியோ, விசிகவோ திமுகவில் தாங்கள் கேட்கும் சீட் எண்ணிக்கை கிடைக்காவிட்டால், அதிமுக, தவெக என இரு சாய்ஸ்கள் அக்கட்சிகளுக்கு உள்ளன.

அதிமுக, பாஜகவை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற முடிவில், விஜய் பக்கம் விசிகவும், காங்கிரஸ் கட்சியும் செல்லக்கூடும். முதல் முறையாக தேர்தல் களத்தில் அடியெடுத்து வைக்கும் விஜய்க்கு இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளதால், விஜய்யுடன் கூட்டணி சேர பெரும்பாலான கட்சிகள் விரும்பக்கூடும். அதற்கு விசிக, காங்கிரஸ் கட்சிகளும் விதிவிலக்கல்ல.

சீட் பேர வலிமை கூடும்: அந்தவகையில், அண்மையில் முடிந்த லோக்சபா தேர்தலைப் போல, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வேறு வாய்ப்பு இல்லாத சூழல் 2026ல் இருக்கப் போவது இல்லை. அதிமுக இல்லாவிட்டாலும், விஜய் கட்சி உடன் கூட்டணி செல்ல கண் முன்னே ஒரு ஆப்ஷன் இருக்கிறது. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இதன் மூலம் தங்கள் பேர வலிமையை கூட்டிக்கொள்ளும் என்பதால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் திமுகவுக்கு தான் பாதிப்பு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+