சர்வே அஸ்திரத்தை கையில் எடுத்த விஜய்.. தமிழ்நாடு முழுக்க எடுக்கப்படும் "கணக்கு".. ஏன் திடீர் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விரைவில் தமிழ்நாடு முழுக்க கட்சி ரீதியாக சர்வே நடத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளதாம். கட்சியில் புதிதாக ஆதவ் அர்ஜுனா இணைந்துள்ளார். தேர்தல் பணிகளை டேட்டா அடிப்படையில் இவர் கவனிக்க கூடியவர் என்பதால்.. விரைவில் கட்சி சார்பாக சர்வே நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் மாநில மாநாட்டை நடத்தியப் பிறகு கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து எவ்வித ஆக்சனையும் எடுக்காமல் இருந்து வரும் விஜய், கடந்த வாரம் முக்கியமான ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனையின் முடிவில்தான் கட்சியில் புதிய நிர்வாகிகள் இணைந்தனர்.

tvk aadhav arjuna vijay

ஆதவ் அர்ஜுனா இணைந்தார்:

அதன்படி ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். ஆதவ் அர்ஜுனா மட்டுமன்றி அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்புகளை நடிகர் விஜய் வழங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இதுதவிர லயோலா மணி உள்பட இன்னும் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுபற்றிய முழு விவரம் வருமாறு: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தற்போது கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். கட்சி சார்பில் மொத்தம் 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமனங்கள் நடந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விரைவில் தமிழ்நாடு முழுக்க கட்சி ரீதியாக சர்வே நடத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளதாம். கட்சியில் புதிதாக ஆதவ் அர்ஜுனா இணைந்துள்ளார். இவர் தலைமையில் அல்லது தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி சார்பில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

1. தமிழக வெற்றிக் கழகத்திற்கு எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்.

2. இளம் வாக்காளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்.

3. எந்தெந்த மாவட்டங்களில் நாம் வலிமையாக உள்ளோம்.

4. எந்தெந்த மாவட்டங்களில் நாம் வளர வேண்டும் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

யாத்திரை பிளான்:

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் அப்போது திட்டங்களை வகுத்தது முக்கியமான அரசியல் ஆலோசகர் ஒருவர். இப்போது விஜய்க்கு பின்னணியில் இருக்கும் நபரும் அதே மாஸ்டர்மைண்ட்தான். அதாவது ஜான் ஆரோக்கியசாமி. தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு யாத்திரை ஐடியாவை கொடுத்துள்ளாராம்.

விஜய் யாத்திரை: தற்போது விஜய்க்கு இவர்தான் தேர்தல் பணிகளை செய்கிறார். இதனால் ஜெகன் மோகனை போலவே நடிகர் விஜய் அடுத்த வருடம் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+