’விசில்’ பறக்குமா? ‘ஆட்டோ’ வருமா? தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்கும் தவெக! ரெடியான விஜய் டீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தங்கள் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கப்பல், விசில், ஆட்டோ, கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பத்து சின்னங்களை கேட்டு அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மனு அளித்துள்ளார். மேலும் சில சின்னங்களை தவெக தரப்பில் வரைந்து கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கட்சிக்கான பொது சின்னம் ஒதுக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

vijay tvk election symbol

இன்று காலை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில், தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அர்ஜுனமூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் மனுவை வழங்கினர்.

தமிழக வெற்றிக் கழகம்

மனுவில், கட்சிக்கான 10 விருப்ப சின்னங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், விஜயின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் எளிதில் மனதில் பதியும் வகையில் "கப்பல், விசில், ஆட்டோ, பேட்" போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது கிடைத்த தகவலின்படி, இச்சின்னங்களில் சிலவற்றை விஜய் தரப்பே வடிவமைத்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தவெக சின்னம்

" தமிழக வெற்றிக் கழகம் 07.02.2025 அன்று பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். மாநிலக் கட்சி அந்தஸ்து பெறும் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் அமைப்பு வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதால், 234 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி தயாராக உள்ளது. எனவே, உடனடியாக கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என அந்த கட்சி வழங்கியுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணைய விதிகளின்படி, புதிய கட்சிகள் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம் பெற முன்கூட்டியே மனு அளிக்க வேண்டும். அதன்படி, தவெக தேர்தல் ஆணையத்தில் முதன்மையாக மனு தாக்கல் செய்த முதல் கட்சியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் மொத்தம் 184 சின்னங்கள் பட்டியலிட்டுள்ளது. கட்சிகள் அதிலிருந்து குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 சின்னங்கள் வரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட சின்னங்கள் குறித்து ஆணையம் ஆய்வு செய்து, ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்றதாக கருதப்படும் ஒரே சின்னம் ஒதுக்கப்படும்.

தவெக பொதுச் சின்னம்

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கான பொதுச்சின்னத்திற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதத்திற்குள் அளிக்கலாம். அனைத்து மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டு, சின்ன ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவு டிசம்பர் 2025 இறுதிக்குள் எடுக்கப்படும். இதன் மூலம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் அதிகாரப்பூர்வமாக சின்னத்தை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் தரப்பு தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்தி வருகிறது. மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பது, இளைஞர் மற்றும் மகளிரணி, சமூக ஊடக அணிகள் ஆகியவை ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. கட்சி சின்னம் உறுதி செய்யப்பட்டவுடன், அதனை மக்களிடம் விரைவாக கொண்டு செல்லும் பணிகலை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+