தவெக மாநாட்டுக்கு நிச்சயம் போவேன்.. விஜய் கட்சியில் இணைவது பற்றி நடிகர் விஷால் சூசகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது முதல் மாநாட்டை வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் நான் கலந்துகொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். மேலும், தவெகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கும் விஷால் பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் விஜய். தவெகவை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சிக் கொடியை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.

tamilaga vettri kazhagam vijay vishal

விஜய் கட்சி மாநாடு: இந்த நிலையில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தனது கொள்கைகளை அறிவித்து முதல் உரையாற்ற உள்ளார். கட்சி மாநாட்டுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விஜய் கட்சியின் முதல் மாநாடான இதில் முக்கிய பிரபலங்கள் அல்லது சினிமா நட்சத்திரங்கள் யாரேனும் கலந்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் நான் கலந்துகொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

விஷால் பேட்டி: சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மாநாட்டுக்கு செல்வேன்: அதற்கு விஷால், "நானும் ஒரு வாக்காளர் தான். ஒரு வாக்காளராக அவர் என்ன சொல்லப்போகிறார் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார், இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட, இவர் என்ன நல்லது செய்யப்போகிறார் என்பதை, மக்களோடு மக்களாக நின்று நானும் பார்ப்பேன். இதற்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மாநாடு நடக்கும்போது எங்காவது ஓரமான நின்று வேடிக்கை பார்க்க வேண்டியது தான். நாம் ஓட்டு போடுகிறோம். புது அரசியல்வாதி வருகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா? அதை டிவியில் எதற்காக பார்க்க வேண்டும்? நேரில் பார்த்தால் நன்றாக இருக்கும். அதற்காக மாநாட்டிற்கு செல்வேன்.

தவெக கட்சியில் இணைவேனா?: தவெக கட்சியில் இணைவது குறித்து இப்போதைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. முதலில் மாநாடு நடத்தட்டும். அவர் என்ன சொல்லப்போகிறார். என்ன செய்யப்போகிறார் என்பதை முதலில் பார்ப்போம். அவர் முதல் அடி வைக்கட்டும். அவரது செயல்பாடு என்ன என்று பார்ப்போம்.

2026 தேர்தலுக்கு இன்றும் நிறைய நேரம் இருக்கிறது. கட்சியில் இணைவேன் என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. ஆனால் எனக்கு பிடித்த அரசியல்வாதிக்கு நான் ஓட்டு போடுவேன். சொல்ல முடியாது வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கலாம். நான் இப்போதும் அரசியல்வாதிதான். யார் எல்லாம் சமூகப் பணி செய்கிறார்களோ அவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள் தான்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+