கட்சி பெயரில் ‘வெற்றி’ ஏன்? விஜய் செண்டிமெண்ட் ரகசியம்!
சென்னை: நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில் ஏன் 'வெற்றி' எனச் சொல்லைச் சேர்த்துள்ளார் என்பதற்கு ஒரு விளக்கம் கிடைத்துள்ளது.
விஜய் தனது புதிய கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயரிட்டிருந்தார். அவரது கட்சியின் பெயர் வெளியான உடனேயே பலரும் முதலில் முன்வைத்த 'வெற்றி கழகம்' என்பதில் ஒற்று எழுத்து விடுபட்டுள்ளது என்பதுதான்.

இலக்கண சுத்தமாக எழுத வேண்டும் என்றால், 'தமிழக வெற்றிக் கழகம்' என்பதே சரி. ஆனால், விஜய் அந்த 'க்' போடாமல் விட்டிருந்தார்.
தமிழ் இலக்கண படி பார்த்தால் வெற்றி என்பது நிலைமொழி. கழகம் என்பது வருமொழி. வெற்றியில் வரும் 'றி' என்பது இகர ஈற்றுச் சொல். இந்த ஈற்றுச் சொல் எங்கெல்லாம் வருகிறதோ அதைத் தொடர்ந்து க,ச,த,ப ஆகிய எழுத்துகளிலிருந்து ஏதேனும் ஒரு எழுத்து வந்தால் அங்கு ஒற்று என்பது மிகும்.
அப்படிப் பார்த்தால் வெற்றி + கழகம் என்பது வெற்றிக் கழகம் ஆகும்.

ஆனால், இந்த ஒற்று விடுபட்டுப் போனதால் தமிழுலகமே திரண்டு வந்து விஜய்யைச் சமூகவலைத்தளத்தில் அவருக்கு அர்ச்சனை செய்தது.
அடுத்து அவர் தமிழ்நாடு எனச் சொல்லாமல் தமிழகம் என்கிறார். அவர் ஆளுநர் ஆர் என் ரவிக்கு ஆதரவாக அப்படி வைத்துள்ளார் என மேலும் சிலர் விமர்சித்தனர்.
பொதுவாகத் திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கப்பட்ட பிறகு, யார் கட்சித் தொடங்கினாலும் திராவிடம் என்ற சொல் கட்டாயம் இருக்கும்.
விஜயகாந்த்கூட திராவிடத்தையும் தேசியத்தையும் ஒரு பெயரைக் கட்சிக்கு வைத்த போது கருவாட்டுக் குழம்பில் எதற்குத் தயிர் சதம் கலந்து சாப்பிடுகிறார் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

திராவிட இயக்கங்களுக்கு மாற்றாகக் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவே தனித் தமிழ் இயக்கங்கள் தங்களின் அரசியலைப் பேசி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் சீமான், தனது கட்சிக்கு நாம் தமிழர் என்று வைத்தார். அதுகூட சி ப ஆதித்தன் கட்சியின் பெயர்தான். அதையே ஏற்று அரசியல் பாதையை உண்டாக்கினார் சீமான்.
இப்போது தொடங்கப்பட்டுள்ள விஜய் கட்சியில் திராவிடம் இல்லை. ஆனால், கழகம் இருக்கிறது. தேசியம் என்ற சொல் இல்லை. அதற்குப் பதில் வெற்றி என்று இருக்கிறது.
இந்தக் கட்சியின் பெயருக்கு திருமாவளவன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதாவது விஜய் என்றால் வெற்றி. அதனால் தனது பெயரை ஒட்டியே கட்சிக்கு வெற்றிக் கழகம் என வைத்துள்ளார் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால், அதைக் கடந்து இந்த வெற்றி ஒரு செண்டிமெண்ட் காரணம் தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான திரைப்படம் 'வெற்றி'. இதை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் இயக்கினார். 1984 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த படம். அதில் விஜயகாந்த் இளமை தோற்றத்தில் விஜய் நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் சிறுவன் விஜய், "அறிஞர் அண்ணா,இளமையில் அன்பும் அறிவும் உடையவராய் விளங்கினார். நட்புணர்வும் நல்ல பண்பும் அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தன" என்று இளம் வயதில் விஜய் பாடம் படிப்பதைப் போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்" என்று பாடம் படிப்பதைப் போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

அந்தக் காட்சியில் அவர் அண்ணாவை வழிபடுவார். இன்று அண்ணாவின் நினைவு நாள். நேற்று அவர் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர் முதன்முதலாக நடித்த படத்தின் டைட்டிலைத்தான் விஜய் தனது கட்சியின் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது. இது அவரது செண்டிமெண்ட். அதற்காகவே திரை வாழ்க்கைக்கு ஓபனிங் கொடுத்த 'வெற்றி'யை அரசியல் வாழ்க்கைக்கும் ஒபனிங் ஆக அமைத்துள்ளார் விஜய்.
-
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்!












Click it and Unblock the Notifications