எந்த கட்சியின் வாக்குகளை விஜய் அதிகமாக எடுக்கிறார்? விகடன் எடுத்த மெகா சர்வே!
சென்னை: நடிகர் விஜய்யின் தவெக தரப்பு திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட 3 கட்சிகளில், எந்த கட்சியின் வாக்குகளை அதிகமாக கைப்பற்றுகிறது என்ற கருத்துக்கணிப்பை ஜூனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ளது. அதுதொடர்பாக இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த திமுக, அதிமுக, நாதக மற்றும் புதிதாக களமிறங்கியுள்ள தவெக என்று 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெரியளவில் கூட்டம் கூடுகிறது. அதேபோல் கருத்துக் கணிப்புகளிலும் விஜய் இரட்டை சதவிகிதத்தில் வாக்கு பெறுவார் என்று சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் விஜய்யின் அரசியல் வருகையால் எந்தக் கட்சிக்கு அதிக பாதிப்பு இந்த தேர்தலில் ஏற்படும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் ஜூனியர் விகடன் நாளிதழ் தரப்பில் விஜய் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், இந்தத் தேர்தலில் உங்களின் ஆதரவு யாருக்கு இருந்திருக்கும் என்று ஒரு கேள்வி எழுப்பி கருத்துக்கணிப்பை எடுத்துள்ளது.
அதன்படி திமுக கூட்டணிக்கு என்று 20.21% பேரும், அதிமுக கூட்டணிக்கு என்று 27.56% பேரும், நாம் தமிழர் கட்சிக்கு என்று 30.71% பேரும், பிற கட்சிகளுக்கு என்று 21.52% பேரும் கூறி இருக்கின்றனர். இதன் மூலமாக விஜய்யின் அரசியல் வருகை நாதகவின் வாக்குகளை அதிகம் பாதிக்கப்படைய வைக்கிறது. இதன்பின் அதிமுக கூட்டணிக்கும், 3வது இடத்தில் திமுக கூட்டணியும் இருக்கிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் நாதக 8.2% வாக்குகளை பெற்றது. இதனால் சட்டசபைத் தேர்தலில் நாதகவின் வாக்குகளை தவெக பெருமளவில் கைப்பற்றும் என்று தெரிகிறது. இன்னொரு பக்கம் விஜய் திமுகவின் வாக்குகளை தான் கைப்பற்றுவார் என்று எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.
ஆனால் அதிமுக கூட்டணி ஆதரவாளர்கள் சுமார் 27.56% பேர் விஜய்க்கு வாக்களிக்க இருப்பதாக கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது. விஜய்யின் அரசியல் வருகையால் இருக்கும் கட்சிகளில் குறைந்த அளவில் பாதிக்கப்படுவது திமுக கூட்டணியாகவே உள்ளது. இதன் மூலமாக விஜய் அத்தனை தரப்பு மக்களின் வாக்குகளையும் கணிசமாக பெறுவார் என்று தெரிகிறது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications