12 மணி நேர வேலை வரவேற்கத்தக்கது.. திமுக கூட்டணி கட்சிகளே எதிர்க்கும் மசோதாவுக்கு விக்கிரமராஜா ஆதரவு!
சென்னை : 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலை என தமிழ்நாடு அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

12 மணி நேர வேலை மசோதா : எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்" என்று தெரிவித்தார்.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.
கடும் எதிர்ப்பு : திமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய இந்த 12 மணி நேர வேலை மசோதாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடங்கி, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமல்லாது மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இதுவரை திமுக அரசு கொண்டு வந்த எந்த மசோதாவிற்கும் இந்த அளவிற்கு எதிர்ப்புகள் எழுந்ததில்லை என்னும் அளவுக்கு 12 மணி நேர வேலை மசோதாவுக்கு மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நாளை திமுகவின் முக்கிய அமைச்சர்கள், தொழிற்சங்கங்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
விக்கிரமராஜா ஆதரவு : இந்நிலையில், 12 மணி நேர வேலை மசோதாவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலை நேரம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். விக்கிரமராஜா, திமுக எம்.எல்.ஏ ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications