Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வைத்து.. திமுகவிற்கு வசமாக செக் வைத்த "டெல்லி".. இப்படி ஒரு சிக்கலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் சட்டமன்றம் கூடும் தேதியும் தள்ளி வைக்கப்படுமா? என்ற விவாதம் அரசு அதிகாரிகளிடம் நடக்கிறது. அக்டோபர் 7-ந்தேதி வரை இடைத்தேர்தல் நடத்த கால அவகாசம் இருக்கும் நிலையில்,

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

vikravandi assembly by election 2024 vikravandi pugazhendhi vikravandi by election dmk politics

தேர்தல் தேதி: விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் இன்றொரு நடைமுறைக்கு வருகின்றன. அடுத்த 1 மாதம் தேர்தல் தேதிகள் நடைமுறையில் இருக்கும்.

வேட்புமனு தாக்கல் : ஜூன் 14 - 21
வேட்புமனு பரிசீலனை : ஜூன் 24
வேட்புமனு திரும்பப்பெற : ஜூன் 26
வாக்குப்பதிவு : ஜூலை 10
வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13

திமுகவிற்கு செக்: திடீரென அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியான திமுக ரொம்பவே அதிர்ச்சியடைந்துள்ளதாம். இதற்கிடையே, நடப்பு நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஜூன் 24-ந்தேதி சட்டமன்றம் கூடும் என்று சமீபத்தில் பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் சட்டமன்றம் கூடும் தேதி மாற்றியமைக்கப்படுமா? என்ற விவாதம் தலைமைச் செயலகத்தில் எதிரொலிக்கிறது. இடைத்தேர்தலுக்கும் சட்டமன்றம் கூடுவதற்கும் தொடர்பில்லை என்று சொல்லப்பட்டாலும் நடத்தை விதிகள் இன்றிலிருந்தே அமலுக்கு வருவதால் சட்டமன்றத்தில் புதிய அறிவிப்புகள் எதையும் திமுக அரசு ரிலீஸ் செய்ய முடியாது.

இடைத்தேர்தலுக்கென எந்த அறிவிப்புகளையும் சட்டமன்றத்தில் செய்திடக்கூடாது.குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதிக்கென எந்த அறிவிப்பையும் செய்திட முடியாது. அதனால், சட்டமன்றத்தில் இடைத்தேர்தலை மையப்படுத்தி திமுக அரசு சிலபல சலுகைகளை அறிவிப்பதை தடுப்பதற்காகவே இந்த திடீர் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

தேர்தல் ஏன்?: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் அவர் லோக்சபா தேர்தல் பிரச்சார நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆன அவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மரணமடைந்தார்.

மகளிர் உரிமைத்தொகை தள்ளிப்போகிறது: இதன் காரணமாக மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கமும் தள்ளிப்போய் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தேர்தல் விதிகள் நடத்தை அமல் காரணமாக மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கமும் தள்ளிப்போய் உள்ளது.

இன்னும் பல முக்கிய அறிவிப்புகள் இந்த தேர்தல் காரணமாக தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+