விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்த விஜய்? யாருக்கு லாபம்? தவெக முடிவு சரியா?
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. கூடவே உள்ளாட்சித் தேர்தலில் கூட நிற்கப்போவதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சரியா என்பது பற்றி அரசியல் விமர்சகர்களின் கருத்து என்ன?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். மிகப்பெரிய எதிர்க்கட்சியான அதிமுகவே இடைத்தேர்தலில் போட்டியிடத் தயங்கும் போது மற்ற கட்சிகளின் நிலைமை தனியே சொல்லத் தேவையில்லை.

பிரதான எதிர்க்கட்சியே பின் தங்கிய பிறகு, தைரியமாகத் தனது வேட்பாளரைக் களம் இறக்கி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த பொதுத் தேர்தல் அதிமுகவுக்குப் பலத்த காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதை வைத்து அதிமுகவிற்குள் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை அறிவித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தனது பட்டியலில் கூடுதலாக ஒரு தோல்வி இணைந்துவிடும் என்பதை அவர் அறிந்தே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்.
சீமான், இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என்ற பாகுபாட்டை எல்லாம் பார்ப்பதில்லை. தனது வேட்பாளரை அவர் அறிவித்துக் கொண்டே இருக்கிறார். அந்த முடிவு மீது பல நேரங்களில் அரசியல் ரீதியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இறுதியில் அவற்றை எல்லாம் தாண்டி அவரது கட்சியை அங்கீகாரம் பெறும் அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் அவர்.
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி நாங்கள்தான் எனக் கடந்த தேர்தல் வரை கூறிவந்த பாஜக, தனது கூட்டணியில் உள்ள பாமகவுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை விட்டுக் கொடுத்துள்ளது.
பாமக சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாதகவுக்கு விஜய் கட்சி ஆதரவு கொடுக்கலாம் என சில ஊகங்கள் நிலவின. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஜய்.
இந்த இடைத்தேர்தல் தவெக போட்டியிடப் போவதில்லை என்றும், 2026தான் தங்களின் இலக்கு என்றும் அவர் கூறிவிட்டார். இந்த முடிவு சரியா? என்ற விவாதமே தேவை இல்லைதான். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவே ஆஃப் ஆகிவிட்டது. இன்னும் கட்டமைப்பைச் சரியாக உருவாக்காத விஜய்யின் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்க முடியாதுதான்.
அரசியல் ரீதியாக இந்த முடிவை விஜய் எடுத்துள்ளது சரியா? அவரது நகர்வு சரியான இலக்கை நோக்கிச் செல்கிறதா? என்பது பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
விஜய்யின் முடிவு குறித்து ரவீந்திரன் துரைசாமி, ""விஜய் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். அதைப்போல் அவர் சிஏஏ சட்டம் தொடர்பாக ஒரு எதிர்ப்பையும் பதியவைத்தார். அது தான் பாஜகவுக்கு ஆதரவாக இல்லை என்பதைக் காட்டுவதற்காகச் செய்தார். சிலர் அவரை பாஜகவின் 'பி'டீம் என்று சொல்கிறார்கள். அது சரியான பார்வையில்லை.
அவர் பாஜகவின் 'பி' டீம் ஆக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவரது செயல்பாடு அப்படித்தான் உள்ளது. தன்னை தனியாகக் காட்ட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது சயனைடு சாப்பிடுவதற்குச் சமம் என்பதைத் தெள்ளத் தெளிவாக விஜய் புரிந்துகொண்டுள்ளார்.
விஜயகாந்த் கூட கும்மிடிப்பூண்டியில் 2008இல் இடைத் தேர்தல் வந்த போது போட்டியிடவில்லை. அது ஒரு நல்ல முடிவு. அதைப்போலவே விஜய் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாதது நல்ல முடிவுதான்.
அதைத்தான் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவு தருவதால், அது அரசியல்ரீதியாக விஜய்க்குப் பலன் தராது. எனவே அவர் இந்த இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு இல்லை என்று எடுத்த முடிவு சரியான முடிவுதான். அவரது இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். அதை நோக்கியே அவர் பயணித்து வருகிறார்.
2026இல் விஜய் தனித்துப் போட்டியிடுவாரா? இல்லை கூட்டணி அமைத்துப் போட்டியிடுவாரா? என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.
இப்போதைக்கு அவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளது விஜய்யின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அவர் சரியான திசையில் பயணிக்கிறார் என்பதைக் காட்டுகிறது" என்கிறார்.
-
லீக்கான ‘ஜனநாயகன்’.. இஸ்லாமியர்களுக்கு எதிரான வசனங்கள்.. பற்றிக்கொண்ட நெருப்பு.. விஜய்க்கு செக்! -
மொத்த பேரையும் பிடித்த விஜய் ஃபீவர்.. தமிழக அரசியலில் ஒரு புது பூகம்பம்.. ஓட்டு வருமா? -
லீக் ஆன ‘ஜனநாயகன்’ பட காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா? விஜய்யிடம் அமீர் கேட்ட கேள்வி! -
TN 2026 Review: இளைய தளபதி விஜய் தாக்கப்பட்டாரா? தநா 2026ல் கதை இதுதான்! இந்திரஜா நெகிழ்ச்சி -
TN 2026 First Review : நட்டி நட்ராஜின், அரசியல் கலந்த தநா 2026 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ -
கடலூரில் விஜய்யின் நாளைய பிரசாரம் திடீர் ரத்து.. தவெக சொன்ன காரணத்தை பாருங்க -
ஒரே பெயரில் பலர் போட்டி! சென்னையில் விஜய் உள்பட தவெக –அதிமுக வேட்பாளர்களுக்கு சிக்கல்! லிஸ்ட் இதோ -
இந்த கட்சி லிஸ்ட்லயே இல்லை.. 10 சதவீதம் ஓட்டு வாங்கப்போறதே அவுங்ககிட்ட இருந்துதான்-ஆதவ் அர்ஜுனா -
திருச்சி கிழக்கு தொகுதியில் ‘டபுள்’ விஜய்.. மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டி! முழு லிஸ்ட் இதோ! -
"கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருங்க.." புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்! -
ஜனநாயகன் பற்றிய கேள்வி, ரஜினி கொடுத்த ரியாக்சன்! கடைசியில் சொன்ன தத்துவம் தான் ஹைலைட் -
நான் அடிச்சா தாங்க மாட்ட.. கெத்தாக இறங்கிய திரிஷா.. ஓஹோ விஷயம் இது தானா? போட்டி அவங்க கூடவா?












Click it and Unblock the Notifications